Advertisment

இது தந்தைகளுக்கான பதிவு! மகள்களுடன் போஸ் கொடுக்கும் பிரபலங்கள் பாச கேலரி.

ஃபோட்டோ கேலரி ஸ்பெஷல் பிரபலங்களின் பெண் பிள்ளைகள் தான்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
இது தந்தைகளுக்கான பதிவு! மகள்களுடன் போஸ் கொடுக்கும் பிரபலங்கள் பாச கேலரி.

cinema news today

cinema news today : தந்தை-மகள்.. இந்த உறவு எப்போதுமே ஸ்பெஷல் தான். தன்னை எப்போதுமே ஏமாற்றாத ஒரே ஆண் தந்தை தான் என் நம்புகிறாள் மகள். மகளை ஒருபோதும் ஏமாற்றி விடக் கூடாது என தந்தையும் தன்னை நல்ல தகப்பனாக நிலைநிறுத்திக் கொள்ள முயல்கிறான்.

Advertisment

இதிலும் சினிமா பிரபலங்களின் வாழ்க்கையை எடுத்துக் கொண்டால் அதில் சிக்கல்கள் அதிகம். தனது தந்தையின் தேவை அந்த பிள்ளைகளுக்கு நிறைய இருக்கும். ஆனால் தனது பிஸி வாழ்க்கையில் பிரபலங்கள் பலரும் அதை சரியாக கவனிக்க முடியாமல் கஷ்டப்படுவார்கள். இருந்தபோதும் சிலர் வேலைகள் முடிந்தவுடன் தனது பிள்ளைகளை அழைத்துக் கொண்டு வெளியூட் ட்ரிப் சென்று வருவார்கள். குறிப்பாக விஜய், சூர்யா, அஜித் போன்ற பிரபலங்கள் வருடத்திற்கு ஒருமுறையாவது தனது பிள்ளைகளை வெளியூர் அழைத்து செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

இன்றைய ஃபோட்டோ கேலரி ஸ்பெஷல் பிரபலங்களின் பெண் பிள்ளைகள் தான்.

1. சுந்தர்.சி

இயக்குனர் சுந்தர் சி.க்கு அவரின் இருமகள்களும் ரொம்ப க்லோஸ். சமீபத்தில் சுந்தர்.சி எடுத்திருந்த ஃபேமலி ஃபோட்டோ ஷூட் இணையத்தில் செல்ல வைரல்.

publive-image

2.  பிரகாஷ் ராஜ்

நடிகர் பிரகாஷ்க்கு அவரின் இருமகள்கள் எப்போதுமே பக்க பலமாக இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக அவரின் 2 ஆவது திருமணம் மற்றும் அரசியல் பிரவேசம் இரண்டுக்கும் அவர்களின் ஆதரவு அதிகம்.

publive-image

3.  சரத்குமார்:

சரத்குமாரின் 3 மகள்களும் அவருக்கு பெஸ்ட் ஃப்ர்ண்ட்ஸ் மாறி. வரலட்சுமி சரத்குமார் பற்றி கேட்கவே வேண்டாம். அப்பா செல்லம் அவர்.

publive-image

 

4. பார்த்திபன்

பார்த்திபன் தனது மகள் மீது வைத்திருக்கும் பேரன்பு அனைவருக்கும் தெரியும். கீர்த்தனா கல்யாணத்தில் அவர் கண்கலக்கி நின்ற நிகழ்வு பார்ப்பவர்களையும் அழக் வைத்திருந்தது.

publive-image

5.அர்ஜூன்:

publive-image

அர்ஜூனின் இருமகள்களும் அவர் மீது வைத்திருக்கும் அன்பு அலாதியானது. தந்தையர் தினத்தன்று தனது தந்தைக்கு இருவரும் கொடுத்த சர்ப்ரைஸ் இணையமே பார்த்தது.

6. சங்கர்:

publive-image

இயக்குனர் சங்கர் தனது மகளை அதிகம் வெளியில் அழைத்து வரமாட்டார். சினிமா வட்டாரங்களில் இதுக் குறித்து விசாரிக்கும் போது எப்போதுமே தனது மகளை அவர் தான் எங்கு சென்றாலும் காரில் அழைத்து செல்வாராம்.

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment