cinema news: கே டி’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமான தமன்னா தொடர்ந்து விஜய், அஜித்குமார், சூர்யா, விக்ரம், கார்த்தி, விஷால், ஜெயம் ரவி, பிரபுதேவா, தனுஷ் என்று முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்தார். தொடர்ந்து நடித்தும் கொண்டிருக்கிறார்.
Advertisment
தமன்னாவின் அழகுக்கு முதிர்ச்சி என்பதே கிடையாது. வரும் டிசம்பரில் தனது 30 ஆவது வயதில் அடியெடுத்து வைக்கிறார் அவர். தொடர்ந்து 10 ஆண்டுகள் சினிமா வாழ்க்கையில் தனது வெற்றிக் கொடியை பறக்கவிட்டவர் அடுத்து திருமணத்திற்கு தயாராகி விட்டார் என்பது தான் சினிமா வட்டாரங்களில் இருப்பவர்களின் பேச்சு.
ஆனாலும் தொடர்ந்து படங்களின் கதைகளை கேட்டு, நடிகைகளுக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களின் சைன் செய்து வருகிறார் தமன்னா. விமர்சனங்கள், வதந்திகள், சர்ச்சைகள் என எதிலும் அதிகம் சிக்காத தமன்னாவிற்கு தமிழ் மற்றும் தெலுங்கில் ரசிகர்கள் அதிகம். இந்த 10 ஆண்டுகளின் சினிமா வாழ்க்கையில் அவர் கண்ட மாற்றங்கள் சிறப்பு புகைப்படத் தொகுப்பாக உங்கள் பார்வைக்கு..
Advertisment
Advertisements
1. கேடி தமன்னா:
தமன்னா தனது 15 ஆவது வயதில் ’சந்த் ஷா ரோஷன் செஹ்ரா’ என்ற இந்தி படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பின்பு தமிழில் அவருக்கு சிறந்த அறிமுகம் கேடி திரைப்படம் தான். ஆனாலும் எஸ்.ஜே சூர்யா நடித்த வியாபாரி படம் தான் முதலில் ரிலீஸானது. அந்த படத்தில் தமன்னா நடிக்கும் போது அவருக்கு வயது 16.
2. மாணவி தமன்னா:
தமிழ் சினிமாவில் தமன்னாவிற்கு திருப்புமுனையாக இருந்த படம் என்றால் அது கல்லூரி தான். மேக்கப் இல்லாமல் மிகவும் இயல்பாக நடித்த தமன்னாவிற்கு ரசிகர்கள் உருவாகினார்கள்.
3. கதாநாயகி தமன்னா:
அதன் பின்பு தமன்னாவின் கதை தேர்வில் சில மாற்றங்கள் தொடங்கின. ஆனந்த தாண்டவம், கண்டேன் காதலை போன்ற ஹீரோயின்கள் லீட் ரோல் படங்களை தேர்வு செய்து நடித்தார். வித்யாசமான படங்களால் ரசிகர்களை ஈர்க்கலாம் என்ற கணக்கும் அவருக்கு இருந்தது.
4. ஃபேவரெட் தமன்னா:
பின்பு தமன்னாவின் படங்கள் தேர்வு தொடங்கி மேக்கப், ட்ரெஸிங் அனைத்திலும் மாற்றங்கள் ஏற்பட்டன. தன்னை முழு நடிகையாக ரசிகர்களுக்கு ஏற்றார் போல் க்ரூமிங் செய்துக் கொண்டார் அவர். தொடர்ந்து விஜய், அஜித் படங்களில் கமிட்டானார். தெலுங்கிலும் ஒரு வலம் வர தொடங்கினார்.
5. கிளாமர் ரோல்:
சினிமாவில் கிளாமர் காட்டாத ஹீரோயின்கள் அதிக நாள் தாக்கு பிடிக்க மாட்டார்கள் என்ற பேச்சு அதிகம் இருப்பது உண்மை. அந்த பேச்சு தமன்னா மீது விழுந்தது. தமிழ், தெலுங்கில் கிளாமருக்கும் முக்கியத்துவம் கொடுக்க தொடங்கினார். கவர்ச்சி நடனம், பிகினி என அனைத்திலும் அசத்தினார்.
6. மீண்டும் தமன்னா:
சில படங்களில் தமன்னாவின் கேரக்டர் அதிகம் பேசப்படவில்லை. இதனால் அவரின் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கின. சின்ன இடைவெளி எடுத்து மிகப் பெரிய கதைக்களத்துடன் மீண்டும் களம் இறங்கினார் தமன்னா. பாகுபலி, தர்மபுரி போன்ற படங்கள் அவரின் நடிப்புக்கு தீணி போட்டது.
7. ஆக்ஷன் தமன்னா:
அடுத்து ஆக்ஷன் ரோலில் தமன்னாவை பார்க்க அவரின் ரசிகர்கள் தயாராகி விட்டனர். தற்போது விஷால் ஜோடியாக ‘ஆக்ஷன்’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை சுந்தர்.சி இயக்குகிறார். முழு நீள சண்டை படமாக தயாராவதால் ஆக்ஷன் என்று பெயர் வைத்துள்ளனர்.
இதில் தமன்னா பெண் ராணுவ கமாண்டோ அதிகாரியாக வருகிறார். இதற்காக கடும் உடற்பயிற்சிகள் மற்றும் பிரத்யேகமாக சண்டைகள் கற்று நடித்து இருக்கிறார்.