நடிகர் விஜயகுமாரின் மகள் அனிதா விஜயகுமார் சென்னையில் புதிதாக கட்டியுள்ள பெரிய வீட்டின் வீடியோ வைராகி வருகிறது.
தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராக இருப்பவர் விஜயகுமார். இந்நிலையில் விஜயகுமார் முதல் மனைவிக்கு கவிதா, அனிதா மற்றும் அருண் விஜய் என மூன்று பிள்ளைகள் உள்ளனர். இரண்டாவது மனைவி மஞ்சுளாவுக்கு வனிதா, ஸ்ரீதேவி, பிரீத்தா என்று மூன்று மகள் உள்ளனர். மஞ்சுளா கடந்த 2013ம் ஆண்டு மறைந்துவிட்டார்.
விஜயகுமாரின் இரண்டாவது மகள் அனிதா விஜயகுமார் டாக்டருக்கு படித்தவர். அவரது மகள் தியாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. இதனிடையே அண்மையில் சென்னையில் புதிதாக பெரிய வீடு ஒன்றை அவர் கட்டினார். வீட்டின் கிரஹப்பிரவேசத்துக்கு குடும்பத்தினர் அனைவரும் வந்திருந்தனர். அனித விஜயகுமார் இதுவரை திரைப்படங்களில் நடித்ததில்லை என்பது குறிப்பிடதக்கது.
இந்த வீட்டில் எல்லா வசதிகளும் உள்ளது, நீளலமான அறைகள், தனியான தியேட்டர், பிரம்மாண்ட பெட்ரூம், என்று மிகவும் பெரிய வீடாக உள்ளது. இந்நிலையில் இந்த வீட்டின் அம்சங்கள் இடம்பெறும் வீடியோவை அவரது இன்ஸ்டிராகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“