Cinnamon Uses: பட்டையை வெதுவெதுப்பான நீரில் போட்டு தேன் சேர்த்து கலந்து குடித்து வந்தால் தொண்டை கரகரப்பு, மூக்கில் நீர் வடிதல் போன்றவை குணமாகும்.
பட்டையில், நறுமணம், ஆரோக்கிய நன்மைகள் மற்றும் ருசி ஆகிய மூன்றும் உள்ளது.
மேலும் பட்டை, பண்டைக்காலம் முதலே பயன்பாட்டில் உள்ளது. இதில் ஆண்டிஆக்ஸிடண்ட் மற்றும் ஆண்டிபையோடிக் தன்மை இருப்பதால் உடல் நலத்திற்கு நன்மை உண்டாக்கும்.
சளி தொல்லை
பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் பட்டை சேர்த்து கொதிக்க வைத்து அந்த ஆவியை முகர்ந்து வந்தால் சளி, இருமல் தொல்லை குணமாகும். அத்தோடு, வெது வெதுப்பான நீரில் பட்டையுடன் தேன் சேர்த்து கலந்து குடித்து வந்தால் தொண்டை கரகரப்பு, மூக்கில் நீர் வடிதல் போன்றவை குணமாகும்.
உடல் எடை
பட்டையை உணவில் சேர்த்து கொள்வதால் உடலில் மெட்டபாலிசம் அதிகரித்து உடல் எடை குறையும்.
நோய் எதிர்ப்பு சக்தி
பட்டையில் பாலிஃபினால் மற்றும் ப்ரோஅந்தோசையனிடின் இருப்பதால் இருதய நோய்கள் போன்றவை குணமாகும்.மேலும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஆண்டிவைரல், ஆண்டிபாக்டீரியல் மற்றும் ஆண்டிஃபங்கல் தன்மை இருக்கிறது.
மாதவிடாய் வலி
காலையில் தினமும் பட்டை சேர்க்கப்பட்ட தண்ணீரை குடித்து வந்தால் மாதவிடாயின் போது ஏற்படும் வயிற்று வலி குணமாகும். உணவில் தொடர்ச்சியாக பட்டை எடுத்து கொண்ட பெண்களை காட்டிலும் பட்டை சேர்த்து கொள்ளாதவர்களுக்கு வலி அதிகமாக இருப்பதாக சில ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
பட்டையை கொண்டு சில எளிமையான ரெசிபிகளை எப்படி தயாரிக்கலாம் என்று பார்ப்போம்.
ரோல்ஸ்
பட்டை, மைதா, சர்க்கரை, வெண்ணெய், பால், பேக்கிங் பவுடர் ஆகியவை கொண்டு மிக எளிமையான மற்றும் ருசியான ரோல்ஸ் தயாரிக்கலாம்.
மஃபின்
பட்டை, மைதா, சர்க்கரை, பேக்கிங் பவுடர், ஆரஞ்சு தோல், ஜாதிக்காய், ஆப்பிள், தயிர், முட்டை, ஆகியவை சேர்த்து மஃபின் தயாரிக்கலாம்.
காக்டெயில்
விஸ்கி, அப்பிள் ஜூஸ் மற்றும் பட்டை சிரப் சேர்த்து தயாரிக்கப்படும் இந்த காக்டெயிலுடன் பட்டை குச்சிகள் வைத்து, ஐஸ் சேர்த்தும் பருகினால் அதன் ருசி அருமையாக இருக்கும்.
குக்கீஸ்
பக்வீட், பிரட் மாவு, கிரீம், சோடா, தேன், க்ளூக்கோஸ், சர்க்கரை, வெண்ணெய், பட்டை ஆகியவை கலந்து குக்கீஸ் செய்து சாப்பிடலாம்.
பேன்கேக்
ஓட்ஸ், மோர், மைதா, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, பட்டை, உப்பு, தேன் அல்லது மேப்பிள் சிரப் ஆகியவை சேர்த்து பேன்கேக் தயாரிக்கலாம்.