இலவங்கப்பட்டை, சமீபத்தில் அதன் ஆண்டிமைக்ரோபியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்காக தோல் பராமரிப்பில் பிரபலமடைந்துள்ளது.
முகப்பரு தொடர்பான பாக்டீரியாக்களுக்கு எதிராக இலவங்கப்பட்டை மற்றும் சிட்ரோனெல்லா எண்ணெய்களின் (citronella oils) கலவையின் பாக்டீரியா எதிர்ப்பு விளைவுகள் ஆய்வு செய்யப்பட்டன, அதில், இலவங்கப்பட்டை தோல் அழற்சியை ஏற்படுத்தாமல் பாக்டீரியாவை திறம்பட எதிர்த்துப் போராடுவது கண்டறியப்பட்டது.
போர்னியோ ஜர்னல் ஆஃப் பார்மசியில் 2023 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், சின்னமால்டிஹைடால் (cinnamaldehyde) ஆன சின்னமோமம் பர்மன்னி எண்ணெய் (Cinnamomum burmannii oil) ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது, ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடுகிறது மற்றும் இளமையான சருமத்தை ஊக்குவிக்கிறது.
இந்தியன்எக்ஸ்பிரஸ்.காம் இது குறித்து மேலும் தெளிவு பெற தோல் மருத்துவர்களிடம் பேசியது.
இலவங்கப்பட்டை முகப்பரு சிகிச்சைக்கு உதவுமா?
மிகவும் பொதுவாகக் கிடைக்கும் சிலோன் இலவங்கப்பட்டை, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளுக்கு பெயர் பெற்றது. இதை சிறிதளவு பயன்படுத்தினால், தோல் பயன்பாட்டிற்கு இது பாதுகாப்பானது என்று தோல் மருத்துவர் ஸ்வேதா மஞ்சந்தா (consultant dermatologist at Aakash Healthcare, New Delhi) கூறுகிறார்.
இலவங்கப்பட்டையில் சின்னமால்டிஹைட் போன்ற சேர்மங்கள் உள்ளன, அவை பாக்டீரியா எதிர்ப்பு விளைவுகளை வெளிப்படுத்துகின்றன, இது முகப்பரு வளர்ச்சிக்கு பங்களிக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. கூடுதலாக, இலவங்கப்பட்டை அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருக்கலாம், இது முகப்பருவுடன் தொடர்புடைய சிவத்தல் மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது, என்று தோல் மருத்துவ நிபுணர் அவினாஷ் ஜாதவ் (consultant dermatologist at Ruby Hall Clinic, Hinjawadi) கூறினார்.
இலவங்கப்பட்டை பொடியுடன், இரண்டு மூன்று டேபிள்ஸ்பூன் தேனை சேர்த்து பேஸ்ட் செய்யவும். தேன் சருமத்தை ஈரப்பதமாக்கி, மேலும் எரிச்சலைத் தடுக்கும், தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் ஒரு எக்ஸ்ஃபோலியன்ட் ஆக செயல்படுவதால், தயிருடன் இலவங்கப்பட்டை சேர்த்து முகத்தில் அப்ளை செய்யலாம், என்று டாக்டர் மஞ்சந்தா கூறினார்.
உடல்நல அபாயங்கள் உள்ளதா?
உங்கள் தோலில் இலவங்கப்பட்டையைப் பயன்படுத்துவதற்கு முன்பு, ஏதேனும் பாதகமான எதிர்விளைவுகளைச் சரிபார்க்க ஒரு பேட்ச் டெஸ்ட் செய்வது அவசியம். உங்கள் தோலின் ஒரு சிறிய பகுதியில் சிறிது இலவங்கப்பட்டையுடன் சிறிது நீர் சேர்த்து தடவி, 24 மணி நேரம் காத்திருந்து எரிச்சல் ஏற்படுகிறதா என்பதைப் பார்க்கவும்.
அசௌகரியம், சிவத்தல் அல்லது அரிப்பு ஏற்பட்டால், இலவங்கப்பட்டையை நேரடியாக தோலில் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும், மேலும் வழிகாட்டுதலுக்கு தோல் மருத்துவரிடம் ஆலோசனை பெறவும், டாக்டர் ஜாதவ் பரிந்துரைத்தார்.
Read in English: Spicing up skincare: Can cinnamon treat acne? Here’s what dermatologists have to say
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“