/indian-express-tamil/media/media_files/2025/01/10/wLMNTOBlSu9na5o57ot0.jpg)
Fan maintenance
குளிர் காலத்தின் இதமான காற்று ஓய்வைக் கொடுத்துச் சென்றாலும், சுட்டெரிக்கும் கோடை வெயிலையும், கடுமையான சூரிய ஒளியையும் எதிர்கொள்ள நீங்கள் தயாராக வேண்டிய நேரம் இது. இதுபோன்ற நாட்களில் உங்களுக்கு நிவாரணம் அளிப்பது உங்கள் அறையில் சுழலும் சீலிங் ஃபேன் மட்டுமே.
ஆனால், உங்கள் ஃபேன் அறைக்குத் தேவையான காற்றோட்டத்தை வழங்கவில்லை என்றால், அல்லது உங்கள் அறையில் உள்ள ஃபேனில் ஏதோ குறைபாடு இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், நாங்கள் உங்களுக்கு உதவ இங்கே இருக்கிறோம்.
இந்த சிக்கல்களைச் சரிசெய்வதற்கு முன், உங்கள் மின்விசிறி ஏன் மெதுவாகச் சுழல்கிறது என்பதற்கான காரணங்களைப் புரிந்துகொள்வது அவசியம்.
சுத்தம் செய்யுங்கள் (Clean the Fan)
சீலிங் ஃபேனின் வேகத்தைக் கூட்டுவதற்கு முன்பு முதலில் அதை சுத்தம் செய்யுங்கள். அதில் படிந்து கிடக்கும் தூசியை துடைத்தாலே ஓரளவுக்கு நன்றாக சுற்ற ஆரம்பிக்கும். எனவே அவ்வப்போது ஃபேனை நன்றாக சுத்தம் செய்யுங்கள். ஃபேனை சுத்தம் செய்வதற்கு முன்பு மின் இணைப்பைத் துண்டித்து விட்டு, துணி பயன்படுத்தி அதன் இறக்கை மற்றும் மோட்டாரை சுத்தம் செய்யலாம். இது அதன் இயக்கத்தை சற்று அதிகரிக்கும்.
கெபாசிட்டரை சரிபார்க்கவும் (Check the Capacitor)
சீலிங் ஃபேனில் வேகம் சார்ந்த பிரச்சினைகளுக்கு அனைவருமே முதலில் சரி பார்க்க வேண்டியது அதன் கெபாசிட்டரைத்தான். ஏனெனில் இதுதான் ஃபேனின் வேகத்தை நிர்ணயிக்கும் கருவியாகும். பெரும்பாலான சமயங்களில் கெபாசிட்டர் மாற்றினாலே பேன் வேகமாக ஓட ஆரம்பித்து விடும். எனவே முதலில் உங்களது ஃபேன் கெப்பாசிட்டர் நன்றாக இருக்கிறதா என சரி பார்த்து, புதிதாக மாற்றி விடுங்கள்.
ஆயில் போடவும் (Oil the Bearings)
ஃபேன் மோட்டார்களில் பொருத்தப்பட்டிருக்கும் பியரிங்கில் காலப்போக்கில் அழுக்கு மற்றும் தூசி குவிந்து, ஃபேன் மெதுவாக ஓட வழி வகுக்கலாம். எனவே அதை சரி பார்த்து, பியரிங் ஆயில் விடவும். ஒருவேளை பியரிங் பழுதாகி இருந்தால், கடையில் கொடுத்து புதிதாக மாற்றுவது நல்லது.
ஃபேனை சரியான இடத்தில் வைக்கவும் (Position the Fan Correctly)
ஃபேனின் செயல்திறன் அது எந்த இடத்தில் இருக்கிறது என்பதைப் பொறுத்தும் நிர்ணயிக்கப்படுகிறது. எனவே காற்றோட்டத்தை அதிகப்படுத்தும் வகையில் மின்விசிறி சரியான நிலையில் உள்ளதா என்பதை சரி பார்க்கவும். குறிப்பாக வெளியே இருந்து குளிர்ந்த காற்றை இழுப்பதற்கு ஜன்னலுக்கு நெருக்கமாக மின்விசிறியை வைக்கவும். மேலும் சீலிங்கில் இருந்து குறைந்தது இரண்டு அடி இடைவெளி இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள்.
உங்கள் அதிவேக கூரை விசிறியை பாதிக்கும் மின்சார சிக்கல்களைக் கையாளும் போது, உரிமம் பெற்ற எலக்ட்ரீஷியனை அழைப்பது அவசியம். DIY தீர்வுகளை முயற்சிப்பது கவர்ச்சியாக இருக்கலாம், ஆனால் நீங்களே வயரிங் பழுதுபார்க்க அல்லது சரிசெய்ய முயற்சிப்பது ஆபத்தானது மற்றும் உங்கள் வீட்டில் மேலும் சிக்கல்களுக்கு - அல்லது ஆபத்துகளுக்கு கூட வழிவகுக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.