செம்பு மற்றும் பித்தளை பாத்திரங்கள் பல இந்திய சமையலறைகளில் உணவுகளை சமைப்பதற்கும் சேமிப்பதற்கும் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.
செம்பு மற்றும் பித்தளை பாத்திரங்களில் உணவுகளை சமைத்து சேமித்து வைப்பதால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும், அவற்றை சுத்தம் செய்யும் போது அவை சிக்கலை ஏற்படுத்தக்கூடும்.
இந்த பாத்திரங்கள் சிறிது காலம் கழித்து கருப்பாக மாறிவிடும். மேலும் சோப்பு கொண்டு கழுவுவது அவற்றின் அசல் நிறத்திற்கு கொண்டு வர உதவாது. எந்த அளவு ஸ்க்ரப்பிங் செய்தாலும் பாத்திரங்களின் நிறம் மாறாது.
ஆனால் இதற்கு ஒரு எளிய தீர்வு இருக்கிறது.
ஃபுட் விலாகர் ரேஷு, செம்பு மற்றும் பித்தளைப் பொருட்களைச் சுத்தம் செய்வதற்கான எளிதான, பயனுள்ள உதவிக்குறிப்பை பகிர்ந்து கொண்டார்.
இந்த கரைசலைத் தயாரிக்க, ஒரு பாத்திரத்தில் சம அளவு சிட்ரிக் அமிலம் (எலுமிச்சை) மற்றும் உப்பு போடவும். பிறகு, ஒரு கப் தண்ணீர் சேர்த்து, உப்பு முழுவதுமாக கரையும் வரை நன்கு கலக்கவும்.
இப்போது, சின்ன தட்டுகள், பூஜை சாமான்கள் போன்ற செம்பு மற்றும் பித்தளை பாத்திரங்களை சுத்தம் செய்ய, அவற்றை சில நிமிடங்கள் கரைசலில் நனைத்து, வழக்கமான தண்ணீரைப் பயன்படுத்தி கழுவவும்.
பாட்டில்கள் மற்றும் கிண்ணங்களைப் பொறுத்தவரை, கரைசலை உள்ளே ஊற்றி, சில நிமிடங்களுக்கு அவற்றை நன்கு குலுக்க வேண்டும். பாத்திரங்கள் சில நிமிடங்களில் அவற்றின் அசல் பிரகாசத்தையும் நிறத்தையும் பெறும்.
இது செப்பு பாத்திரங்களை சுத்தம் செய்வதற்கான பாரம்பரிய மற்றும் எளிதான முறையாகும். இந்த இரண்டு பொருட்கள் எந்த சமையலறையிலும் எளிதாகக் கிடைக்கும். எலுமிச்சம்பழம் கிடைக்கவில்லை என்றால் அதற்கு பதிலாக வினிகரைப் பயன்படுத்தலாம்.
குறிப்பு: உணவுப் பொருட்களை செம்பு அல்லது பித்தளை பாத்திரங்களில் எட்டு மணி நேரத்திற்கும் மேலாக சேமித்து வைக்கக் கூடாது, ஏனெனில் உலோகத்துடன் சேர்ந்து உணவுபொருட்களில் அமில எதிர்வினை ஏற்படுகிறது என்று ரேஷூ கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“