வண்ண உடைகளில் சாயம் படிவது என்பது பலருக்கும் ஒரு பொதுவான பிரச்சனை. குறிப்பாக, வேறு வண்ணத் துணிகளுடன் சேர்த்து துவைக்கும்போது, சாயம் பரவி உடையின் அழகை கெடுத்துவிடும். ஆனால், மிக எளிய முறையில் அந்த சாயக் கரைகளை நீக்க ஒரு சூப்பரான டிப் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
ஒரு பௌலில் 1 டேபிள்ஸ்பூன் பேக்கிங் சோடாவை எடுத்துக்கொள்ளவும். அதனுடன் 1 டேபிள்ஸ்பூன் வினிகரை சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த கலவை நுரைத்து வரும்.
பயன்படுத்தும் முறை:
தயார் செய்த இந்த கலவையை, உங்கள் வண்ண ஆடைகளில் எங்கு சாயம் படிந்துள்ளதோ, அந்த இடங்களில் நன்றாகத் தடவவும். சுமார் 10 நிமிடங்கள் அப்படியே விடவும். 10 நிமிடங்கள் கழித்து, வழக்கம் போல் துணியை துவைத்து எடுக்கவும். சாயம் படிந்திருந்த இடம் சுத்தமாகி, உங்கள் ஆடை புத்தம் புதியது போல் ஜொலிக்கும்!