உங்கள் அலமாரியில் இருக்கும் சட்டைகளும், புடவைகளும் ஒரு முறை துவைத்தவுடனே பழைய தோற்றத்தைக் கொடுக்கிறதா? புத்தம் புதியது போல பிரகாசமாக, கசங்காத ஆடைகளை அணிய வேண்டும் என்ற ஆசையா? இந்த ரகசியங்களை நீங்கள் தெரிந்து கொண்டால், உங்கள் துணிகள் எப்போதும் புத்தம் புதியது போலப் பொலிவுடன் இருக்கும்.
Advertisment
பொதுவாக, சட்டைகளின் காலர்களில் படிந்திருக்கும் அழுக்கை நீக்குவது ஒரு பெரிய சவால். ஆனால், இந்த வழிமுறையைப் பின்பற்றினால், அழுக்குகள் எளிதில் நீங்கும்.
ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் எடுத்து, ஒரு சிட்டிகை கல்லுப்பு மற்றும் நீங்கள் வழக்கமாகப் பயன்படுத்தும் துணி துவைக்கும் பவுடர் சிறிதளவு சேர்த்து நன்கு கலக்கவும். அழுக்கு படிந்த சட்டையை இந்த கலவையில் சுமார் 10 நிமிடங்கள் ஊற விடவும்.
ஜவ்வரிசி பேஸ்ட்
Advertisment
Advertisements
ஒரு கடாயில் அரை லிட்டர் தண்ணீர் எடுத்து, அடுப்பில் வைத்து சூடாக்கவும். நான்கு டீஸ்பூன் ஜவ்வரிசி சேர்த்து, ஜவ்வரிசி நன்கு வெந்து பசை பதத்திற்கு வரும் வரை கொதிக்க விடவும். ஜவ்வரிசி நன்கு வெந்தால்தான் அதிலிருந்து அதிக பசை கிடைக்கும்.
நன்கு வெந்ததும், ஒரு வடிகட்டி பயன்படுத்தி ஜவ்வரிசி பசையை தனியாக வடிகட்டி எடுக்கவும். இந்த பசையை மூன்று மாதங்கள் வரை சேமித்து வைக்கலாம். இந்த ஒரு முறை செய்த பசை சுமார் 10-15 சட்டைகளை துவைக்கப் பயன்படுத்தலாம்.
பயன்படுத்தும் முறை:
ஊற வைத்த சட்டையை எடுத்து, மென்மையான ஸ்க்ரப்பரைப் பயன்படுத்தி லேசாகத் தேய்க்கவும். அழுக்குகள் எளிதில் நீங்கிவிடும். ஒரு வாளி அல்லது பாத்திரத்தில், வடிகட்டி எடுத்த ஜவ்வரிசி பசையில் இருந்து ஒரு டீஸ்பூன் எடுத்து, அதனுடன் உங்களுக்குப் பிடித்தமான கம்பர்ட் போன்றவை ஒரு டீஸ்பூன் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கைகளால் நன்கு கலக்கவும்.
இப்போது, துவைத்த சட்டையை இந்த ஜவ்வரிசி கலவையில் இரண்டு மூன்று முறை நன்கு முக்கி எடுக்கவும். எல்லா இடங்களிலும் பசை படுமாறு பார்த்துக் கொள்ளவும். இந்த சட்டையை காய வைத்து எடுத்தால், சலவை செய்யாமலேயே புத்தம் புதியது போல ஸ்டிஃப்பாக இருக்கும். சாதாரணமாக நாம் துவைக்கும்போது ஆடைகள் கசங்கிப் போய், சலவை செய்த பிறகுதான் அந்த ஸ்டிஃப்னஸ் கிடைக்கும். ஆனால் இந்த முறையில் துவைத்த ஆடைகள் சலவை செய்யாமலேயே ஸ்டிஃப்பாகவும், சுருக்கமின்றியும் இருக்கும்.