கிராம்பில் பல நன்மைகள் உள்ளது. இதில் கார்போஹைட்ரேட், புரத சத்து, கொழுப்பு சத்து, நார்சத்து, இரும்பு சத்து, பொட்டாஷியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், சோடியம், காப்பர், செலினியம், வைட்டமின் பி.ஏ.இ,கே உள்ளது.
தினமும் வெறும் வயிற்றில் 2 கிராம்பு சாப்பிட வேண்டும். அப்படி சாப்பிடவில்லை என்றால், இரவு தூங்கும்போது ஒரு கிராம்பை வாயில் போட்டு மெல்ல வேண்டும்.
கல்லீரல் பாதுகாப்பை உறுதி செய்யும். வயிறு மற்றும் வாய் புண்களை குணப்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். வாய் நாற்றத்தை குணப்படுத்தும், நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
அஜீரணம் நீங்கும், சளிக்கு நிவாரணம் தரும். பற்கள் வலி, ஈறுகளில் வீக்கம், போன்றவைகளை கிராம்பு தீர்க்ககூடியது. பல் வலி மட்டுமல்ல, காது வலி குணமாக கிராம்பு, எண்ணெய் சரியாக இருக்கும்.
தலைவலிக்கும் கிராம்பு எண்ணெய் பயன்படுத்தலாம், எலும்பு அடர்த்தியை அதிகரிக்கும். ஜீரண பிரச்சனையை தீர்க்கும். சர்கக்ரை நோயாளிகளுக்கு கிராம்பு மிகவும் அவசியமானது, இதனால் ரத்ததில் உள்ள சர்க்கரை கட்டுக்குள் இருக்கும். நுரையீரல் ஆரோக்கியத்திற்கு கிராம்பு உதவுகிறது. ஆஸ்துமா, சுவாச பிரச்சனைக்கு தீர்வாக அமையும்.
கிராம்பை தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைக்கலாம். அந்த தண்ணீரை குடிக்கலாம். டீயில் கலந்து குடிக்கலாம்.