Advertisment

சிம்புவின் வேற லெவல் பாடி டிரான்ஸ்ஃபார்மேஷன்.. டிரெய்னர் பகிர்ந்த சுவாரசிய தகவல்கள்!

சிம்பு சமீபத்தில் தனது 39வது பிறந்தநாளை கொண்டாடினார். அதேவேளையில், அவரது உடல் எடை குறைப்பு பயண வீடியோ இணையத்தில் பயங்கர வைரலாகியது.

author-image
WebDesk
New Update
simbu body transformation

சிம்புவின் வேற லெவல் பாடி டிரான்ஸ்ஃபார்மேஷன்.. டிரெய்னர் பகிர்ந்த சுவாரசிய தகவல்கள்!

சிம்புவின் வாழ்க்கையைப் பற்றி யாராவது ஒரு புத்தகம் எழுதினால், அதில் சுவாரஸ்யங்களுக்கு பஞ்சமே இருக்காது. ஏனெனில், கடந்த 10 வருடங்களில் சிம்புவின் வாழ்க்கையிலும், தொழிலிலும் நிறைய நடந்துள்ளது.

Advertisment

சிக்ஸ்-பேக் வைத்து அழகான ஹீரோவாக வலம்வந்தவர், பின்னர் 100 கிலோவுக்கு மேல் அதிக எடையில் இருந்தார். படத்துக்கு படம் பிளாக்பாஸ்டர்களை கொடுத்த சிம்புவுக்கு’ ஒருகட்டத்தில் எதுவும் இல்லாமல் ஆனது. சில சமயங்களில், அவரது வாழ்க்கை உயரத்தில் இருப்பது போல் தோன்றினாலும், பின்னர் அது சரிவின் விளிம்புக்கு சென்றது. தொழில்துறையில் உள்ள சில பெரிய தலைகள், அவரது கடினமான காலங்களில் அவருக்குப் பின்னால் கற்களை வீசினர். எந்த சினிமாவில், தனது சிறுவயதிலிருந்து ஒரு பகுதியாக இருந்தாரோ அதிலிருந்து விலக்கப்பட்டார்.

2011 ஆம் ஆண்டில், சிம்பு’ சல்மான் கானின் பிளாக்பஸ்டர் படமான தபாங்கின் தமிழ் ரீமேக்கான ஒஸ்தி திரைப்படத்தில் கடைசியாக தனது அப்ஸ்-ஐ வெளிப்படுத்தினார். மூன்று படங்களுக்குப் பிறகு, அச்சம் என்பது மடமையடா-வில், அவர் உடல் எடை கூடியது, அவருடைய தோற்றம், நடிப்பு எல்லாமே அடியோடு மாறிவிட்டது.

நான்கு ஆண்டுகளாக, சிம்புவுக்கு பெரிதாக வேலை இல்லை, வீட்டிலேயே இருந்தார், அவரது தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையின் சொல்லும்படி எந்த வெற்றிகளும் இல்லை.

இப்படி ஒரு நிலையில்தான் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் சிம்பு’ தன்னைக் கண்டார்,

2020 இல் தனது சிறந்த நண்பரான மஹத் ராகவேந்திராவின் திருமணத்தின் போது, ​​முன்னாள் உடற்பயிற்சியாளர் சந்தீப் ராஜை சிம்பு சந்தித்தார்.

இருப்பினும், இயக்குனர் மணிரத்னத்தின் செக்க சிவந்த வானம் திரைப்படத்தின் போது தான் சிம்புவுக்கு’ அவரது வாழ்க்கையின் ஆரோக்கியமற்ற கட்டத்தை விட்டு வெளியேற தூண்டுதல் ஏற்பட்டது.

“படத்தில் நான் வேகமாக ஓட வேண்டிய ஒரு ஷாட் இருந்தது. காட்சிக்குப் பிறகு, என் முழங்கால் மூட்டுகளில் நிறைய வலியை அனுபவித்தேன். அந்த நேரத்தில், என் உடல் செயல்பாடு பூஜ்ஜியமாக இருந்தது. அதனால் நீண்ட நாட்களுக்குப் பிறகு அந்தக் காட்சிக்காக ஓடியது எனக்கு மிகுந்த வேதனையை அளித்தது. அன்று பயங்கரமாக அழுதேன். நான் ஆறுதலடையாமல் இருந்தேன்.  படத்தைப் பார்த்த பிறகு, என்னால் ஓட முடியவில்லை என்று பலர் சுட்டிக்காட்டினர். அங்கிருந்து’ மாநாடு படத்தில்’ நான் ஒரு காட்சிக்காக ஓட வேண்டியிருந்தது, என்னை யாராலும் பிடிக்க முடியவில்லை, ”என்று சிம்பு முன்பு நினைவு கூர்ந்தார்.

முன்னதாக ஒரு பேட்டியில், சிம்பு ஒரு நாளைக்கு ஐந்து பிரியாணி சாப்பிடுவார் என்று சந்தீப் ராஜ் தெரிவித்திருந்தார். அவர் தனது எடை இழப்பு பயணத்தைத் தொடங்கியபோது, ​​​​அவர் இறைச்சி சாப்பிடுவதை விட்டுவிட்டார். அவர் நிறைய காய்கறிகளை சாப்பிட்டார், மேலும் அவர் தனது உணவை சுவையாக மாற்ற தானே சமைத்தார்.

கடுமையான டயட்டைத் தவிர, அவர் தினமும் சுமார் 8 மணிநேரம்’ உடற்பயிற்சி வழக்கத்தைப் பின்பற்றினார். அவரது நாள் அதிகாலை 4:30 மணிக்கு தொடங்கியது.  அவரது உடற்பயிற்சியில்’ வழக்கமான நடைபயிற்சி, எடை பயிற்சி, நீச்சல், விளையாட்டு மற்றும் கார்டியோ ஆகியவை அடங்கும். பிப்ரவரி 2021 வாக்கில், அவர் கிட்டத்தட்ட 10 கிலோவை இழந்தார்.

கடைசியாக பரிசோதித்தபோது, ​​​​சிம்பு 70 கிலோவுக்கு கீழ் இருந்ததாக நேர்காணலின் போது, ​​சந்தீப் தெரிவித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment