/indian-express-tamil/media/media_files/2025/05/26/paWaf7mqEake7ejN2sd8.jpg)
Natural cockroach killer
கரப்பான்பூச்சிகளைப் பொறுத்தவரை, மனிதர்களுடன் வாழ்வதுதான் அவற்றுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. நம்மை சர்ப்ரைஸ் செய்து, திடீரென ஒரு நொடியில் மேல வந்து ஒட்டிக்கொள்ளும் அந்த அதிர்ச்சியில் அவற்றுக்கு அப்படி ஒரு சந்தோஷம்! பதிலுக்கு நாமும், "இவற்றை எப்படியாவது ஒழித்தே தீர வேண்டும்" என்று பல வகையான ஸ்ப்ரேக்களை வாங்கிப் பயன்படுத்துவோம். இனி இந்த முறையை முயற்சி செய்து பாருங்கள். கரப்பான்பூச்சிகளின் நடமாட்டத்தை நம்மால் வெகுவாகக் குறைக்க முடியும்.
தேவையான பொருட்கள்:
கொஞ்சம் கோதுமை மாவு
அதே அளவு போரிக் பவுடர் (கேரம் போர்டுக்குப் பயன்படுத்துவோமே, அதே பவுடர் தான்!)
சிறிதளவு தண்ணீர்
எப்படி செய்வது?
கோதுமை மாவு மற்றும் போரிக் பவுடர் இரண்டையும் எடுத்துக்கொள்ளுங்கள். அவற்றுடன் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும். இந்தக் கலவையைச் சின்னச் சின்ன உருண்டைகளாகப் பிடித்துக்கொள்ளுங்கள். வீட்டில் கரப்பான்பூச்சிகளின் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்கள் எவையோ, அங்கெல்லாம் இந்த உருண்டைகளைப் போட்டுவிடுங்கள்.
முக்கிய குறிப்பு: வீட்டில் குழந்தைகள் இருந்தால், அவர்கள் இந்த உருண்டைகளை எடுத்து வாயில் போட்டுக்கொள்ளாதவாறு சற்று கவனமாக இருங்கள்.
இந்த முறையைப் பயன்படுத்திய பிறகு, உங்கள் வீட்டில் கரப்பான்பூச்சிகளின் நடமாட்டம் கணிசமாக குறைவதை நீங்கள் நிச்சயம் பார்க்கலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.