கற்பூரத்துடன் இதை கொஞ்சமா சேருங்க… வீட்டில் கரப்பான் பூச்சி, பல்லி தொல்லை இல்லாமல் இருங்க!

கற்பூரத்தைப் பயன்படுத்தி கரப்பான் பூச்சி, பல்லி மற்றும் எலிகளை வீட்டிலிருந்து விரட்டுவது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

கற்பூரத்தைப் பயன்படுத்தி கரப்பான் பூச்சி, பல்லி மற்றும் எலிகளை வீட்டிலிருந்து விரட்டுவது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

author-image
WebDesk
New Update
Natural cockroach lizard killer

Natural cockroach killer

வீட்டில் எலி, கரப்பான் பூச்சி, பல்லி போன்ற பூச்சிகளின் தொல்லைகள் தினமும் தலைவலியாக இருக்கிறதா? இந்த தொல்லைகளில் இருந்து விடுபட நீங்கள் பல வழிகளை முயற்சி செய்திருக்கலாம். ஆனால், ஒரு கற்பூரம் இருந்தால் போதும், இந்த தொல்லைகளுக்கு முழுக்கு போடலாம். இது எப்படி சாத்தியம் என்று தெரிந்துகொள்ள, இந்த வீடியோவை பாருங்கள்!

Advertisment

தேவையான பொருட்கள்:

கற்பூரம்
ஊதுபத்தி அல்லது கொசுவர்த்தி
ஈனோ பவுடர்
ரஸ்க் அல்லது பிஸ்கட்
பாத்திரம் தேய்க்கும் ஸ்கிரப்பர்

Advertisment
Advertisements

4-5 கற்பூரத் துண்டுகளை எடுத்து நன்றாகப் பொடித்து ஒரு கிண்ணத்தில் சேர்க்கவும். ஒரு ஊதுபத்தி அல்லது கொசுவத்தியை எடுத்து காகிதத்தில் வைத்து நன்றாகப் பொடித்து கற்பூரப் பொடியுடன் சேர்க்கவும்.

இந்தக் கலவையுடன் ஒரு கிளாஸ் தண்ணீர் சேர்த்து நன்றாகக் கலக்கவும். பிறகு அரை பாக்கெட் ஈனோ பவுடரைச் சேர்த்து, மீண்டும் நன்றாகக் கலக்கி, மூடி போட்டு அரை மணி நேரம் ஊற விடவும்.

அரை மணி நேரத்திற்குப் பிறகு, இந்தக் கரைசலை வடிகட்டி ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றிக் கொள்ளலாம். ஸ்ப்ரே பாட்டில் இல்லையென்றால், சாதாரண தண்ணீர் பாட்டிலின் மூடியில் ஓட்டை போட்டு பயன்படுத்தலாம்.

ஸ்க்ரப்பர் துண்டு தயாரிக்கும் முறை

பாத்திரம் கழுவும் ஸ்க்ரப்பரை சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். ஒரு கிண்ணத்தில் சிறிது கற்பூரக் கரைசலை எடுத்து, அதில் ஸ்க்ரப்பர் துண்டுகளைப் போட்டு நன்றாக ஊறவைக்கவும்.

பிஸ்கட் அல்லது ரஸ்க் எடுத்து நன்றாகப் பொடித்துக் கொள்ளவும். ஊறவைத்த ஸ்க்ரப்பர் துண்டுகளை எடுத்து, பிஸ்கட்/ரஸ்க் தூளில் நன்றாகப் புரட்டி எடுக்கவும்.

பயன்படுத்தும் முறை

rat in home

நீங்கள் தயாரித்த ஸ்ப்ரே லிக்குவிடை சமையலறை கவுண்டர்டாப், சிங்க் அடியில், குழாய்கள் மற்றும் கரப்பான் பூச்சி, பல்லி தொல்லை அதிகமாக இருக்கும் இடங்களிலும் தெளிக்கவும்.

இரவில் சமையலறையில், சிங்க் அருகில், கதவு ஓரங்கள், ஜன்னல் பகுதிகள் மற்றும் எலித்தொல்லை அதிகம் உள்ள இடங்களில் பிஸ்கட்/ரஸ்க் கலந்த ஸ்க்ரப்பர் துண்டுகளை வைக்கவும்.

இது எப்படி வேலை செய்கிறது?

எலிகள் பிஸ்கட் அல்லது ரஸ்க் வாசனையால் ஈர்க்கப்பட்டு, ஸ்கிரப்பரில் உள்ள கரைசலைச் சாப்பிடும். கற்பூரம், ஊதுபத்தி மற்றும் ஈனோ கலவை எலிகளின் வயிற்றுக்குள் சென்று கடுமையான எதிர்வினையை உண்டாக்கி அவற்றை விரட்டி அடிக்கும். இந்த மந்திரக் கரைசல் உங்கள் வீட்டில் ஒரு மேஜிக் போல வேலை செய்யும்!

இந்த எளிய குறிப்பைப் பயன்படுத்தி உங்கள் வீட்டிலுள்ள தொல்லைகளை விரட்டி அடியுங்கள். இது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம்!

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: