/indian-express-tamil/media/media_files/2025/04/26/gdMt9UOxivKOG8ZZlmED.jpg)
Natural DIY pest control
முதலில் ஒரு வேஸ்ட்டான பவுல் எடுத்துக்கோங்க. அதுல, ஒரு ஸ்பூன் டால்கம் பவுடர் சேர்த்துக்கலாம். ரெண்டு கற்பூரத்தை கையால நல்லா நொறுக்கி அதுல கலந்துடுங்க. இப்போ, கை பொறுக்கும் சூட்டில் வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து நல்லா கலக்குங்க. தண்ணீர் சூடாகும்போது, பவுடரும் கற்பூரமும் சீக்கிரமா கரைந்து, ஒரு அற்புதமான லிக்விட் தயாராகிவிடும்!
ஒரு ஜூஸ் பாட்டில் எடுத்து, அதோட மூடியில சின்ன சின்ன ஹோல்ஸ் போட்டுக்கோங்க. இப்போ நம்ம தயாரிச்ச இந்த லிக்விடை அந்த பாட்டில்ல ஊத்துங்க. உங்க கரப்பான்பூச்சி மற்றும் பல்லி விரட்டி ஸ்ப்ரே தயார்
சமையலறை சிங்க் முதல் வீடு முழுவதும்
கரப்பான்பூச்சி அதிகமா இருக்கக்கூடிய இடம் எதுன்னு கேட்டா, சந்தேகமே இல்லாம கிச்சன்தான்! ராத்திரி கிச்சன் எல்லாம் கிளீன் பண்ணதுக்கு அப்புறம், கவுண்டர் டாப்ல இந்த லிக்விடை நல்லா ஸ்ப்ரே பண்ணிவிட்டு, ஒரு துணியால் தொடைச்சு விட்டுடுங்க. அப்புறம் பாருங்க, ஒரு பல்லி கரப்பான்பூச்சி கூட வரவே வராது!
கரப்பான்பூச்சி வருவதற்கு முக்கிய காரணம், சமையலறை சிங்க்கில் இருக்கும் உணவு கழிவுகள்தான். அதிகமா கரப்பான்பூச்சியும் பல்லியும் எங்கெல்லாம் தொந்தரவு கொடுக்குதோ, அங்கெல்லாம் இந்த அற்புத திரவத்தை ஸ்ப்ரே பண்ணிவிடுங்க.
இதைத் தொடர்ந்து செய்யும்போது, உங்க வீட்ல ஒரு கரப்பான்பூச்சி பல்லி கூட இருக்காது! உங்க வீட்டை பூச்சிகள் இல்லாத சொர்க்கபுரியா மாத்த தயாரா?
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.