மழைக்காலம் வந்துவிட்டாலே, வீடுகளில் கொசு, கரப்பான்பூச்சி, பல்லி, எலி போன்ற பூச்சிகளின் தொல்லை தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடும். இரவில் கொசுக்கடி, சமையலறையில் கரப்பான்களின் ஊர்வலம், இரவில் எலிகள் நடமாட்டம் என நிம்மதியைக் கெடுக்கும் இந்தப் பூச்சிகளை விரட்டப் பலரும் ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், அவை உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடும். வீட்டிலேயே எளிதில் கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்தி, இந்த பூச்சிகளை விரட்டக்கூடிய 2 எளிய மற்றும் பாதுகாப்பான டிப்ஸ் பற்றிப் பார்க்கலாம்.
கரப்பான்பூச்சி மற்றும் பல்லிகளுக்கு ஸ்ப்ரே:
சமையலறை மற்றும் கழிவறைகளில் பொதுவாகக் காணப்படும் கரப்பான்பூச்சிகள் மற்றும் பல்லிகளை விரட்ட இந்த ஸ்ப்ரே மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
கம்ஃபர்ட் ஃபேப்ரிக் கண்டிஷனர் - 1 பாக்கெட் அல்லது 50 மி.லி., பெரிய வெங்காயம் - 1, கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி
தயாரிக்கும் முறை:
ஒரு பாத்திரத்தில் 1 லிட்டர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும். பெரிய வெங்காயத்தை தோலுரித்து துண்டுகளாக்கி தண்ணீரில் சேர்க்கவும். கைப்பிடி கறிவேப்பிலையையும் அத்துடன் சேர்த்து, நன்கு கொதிக்க விடவும். தண்ணீர் பாதியாகும் வரை கொதிக்க விட்டு, அடுப்பை அணைத்து ஆற விடவும். ஆறியதும், இந்த கரைசலை வடிகட்டி, சுத்தமான நீரை மட்டும் தனியாக எடுக்கவும். வடிகட்டிய நீரில் கம்ஃபர்ட் ஃபேப்ரிக் கண்டிஷனரை ஊற்றி நன்கு கலக்கவும். இந்தக் கலவையை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் மாற்றிக் கொள்ளவும்.
பயன்படுத்தும் முறை:
சமையலறை மேடைகள், கேஸ் அடுப்புகளுக்கு அடியில், சிங்க் பகுதிகள், வாஷிங் மெஷின்களுக்குப் பின்னால், மற்றும் கழிப்பறை மூலைகளில் இந்த ஸ்ப்ரேயைத் தெளிக்கலாம். வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையின் வாசனை பூச்சிகளை அண்ட விடாது, அதே நேரத்தில் கம்ஃபர்ட் பூச்சிகளை மயக்கமடையச் செய்து, அவை அங்கிருந்து வெளியேறச் செய்யும்.
எலித் தொல்லையா?
வீட்டிற்குள் நுழையும் எலிகள் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களை நாசம் செய்வதுடன், நோய்களையும் பரப்பும். இந்த எலிகளை விரட்ட இந்த வீட்டு முறை உதவும்.
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 1 கப், கற்பூரம் - 2-3 வில்லைகள் (Camphor tablets), பேக்கிங் சோடா - 1 டீஸ்பூன், கம்ஃபர்ட் ஃபேப்ரிக் கண்டிஷனர் - 1-2 டீஸ்பூன்
தயாரிக்கும் முறை:
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, பேக்கிங் சோடா மற்றும் பொடித்த கற்பூரம் ஆகியவற்றைச் சேர்க்கவும். இவற்றை நன்கு கலந்த பின், சிறிது சிறிதாக கம்ஃபர்ட் ஃபேப்ரிக் கண்டிஷனரைச் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும். இந்த மாவை சிறிய சிறிய பந்துகளாக உருட்டவும்.
பயன்படுத்தும் முறை:
இந்த பந்துகளை எலிகள் நடமாடும் இடங்களில், குறிப்பாக சமையலறை மூலைகள், பொருட்களுக்குப் பின்னால், தோட்டப் பகுதிகள், அல்லது கார் போன்ற இடங்களில் வைக்கலாம். கற்பூரத்தின் வாசனை எலிகளுக்குப் பிடிக்காதது. மாவு மற்றும் கம்ஃபர்ட் கலவை அவற்றை ஈர்த்து, சாப்பிடும்போது மயக்கமடையச் செய்து வெளியேறச் செய்யும். இந்த இயற்கை முறைகள் ரசாயன பூச்சிக்கொல்லிகளை விட பாதுகாப்பானவை. அவற்றை முயற்சி செய்து, உங்கள் வீட்டைப் பூச்சி தொல்லையிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்.