/indian-express-tamil/media/media_files/2025/06/05/aYAY9ZvzWtIt3iFb86CF.jpg)
Cockroach, Lizard repellent Home remedies
உங்கள் வீட்டில் கரப்பான் பூச்சி மற்றும் பல்லி தொல்லை அதிகமாக இருக்கிறதா? குறிப்பாக சமையலறையில் இவை ஏற்படுத்தும் சங்கடங்கள் அதிகம். இரவு நேரங்களில் சமையலறையில் நடமாடும் கரப்பான் பூச்சிகளும், சுவர்களில் ஓடும் பல்லிகளும் பலருக்கு எரிச்சலையும், பயத்தையும் ஏற்படுத்தும். இனி கவலையில்லை!
பச்சை மிளகாய் மற்றும் பூண்டைப் பயன்படுத்தி மிக எளிதாகவும், இயற்கையாகவும் இந்த தொல்லையிலிருந்து விடுபட ஒரு அற்புதமான வழி உள்ளது. இந்த டிப்ஸ் உங்கள் வீட்டிலிருந்து கரப்பான் பூச்சிகள் மற்றும் பல்லிகளை உடனடியாக விரட்டிவிடும்.
தயாரிக்கும் முறை:
நல்ல காரமான பச்சை மிளகாயை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். வேண்டுமானால் இடித்துக் கொள்ளலாம். இரண்டு பல் பூண்டையும் நன்றாக நசுக்கிக் கொள்ளுங்கள்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து, அதில் நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் நசுக்கிய பூண்டு இரண்டையும் சேர்க்கவும். இதை ஒரு மணி நேரம் ஊற விடவும்.
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஊறிய பின், பச்சை மிளகாயில் உள்ள காப்சைசின் (Capsaicin) மற்றும் பூண்டில் உள்ள அல்லிசின் (Allicin) ஆகிய வேதிப்பொருட்கள் தண்ணீரில் நன்றாகக் கலந்து ஒரு சக்திவாய்ந்த திரவத்தை உருவாக்கும்.
இந்த இரண்டு பொருட்களும் கரப்பான் பூச்சிகளுக்கும், பல்லிகளுக்கும் ஒவ்வாதவை. அவற்றின் கடுமையான வாசனையும், காரத்தன்மையும் கரப்பான் பூச்சிகளையும், பல்லிகளையும் உங்கள் வீட்டின் அருகில் கூட அண்ட விடாது.
பயன்படுத்துவது எப்படி?
தயாரிக்கப்பட்ட திரவத்தை நன்றாக வடிகட்டி ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றவும். நீங்கள் ஒரு பழைய ஷாம்பு பாட்டிலைப் பயன்படுத்தலாம். உங்கள் வீட்டில் கரப்பான் பூச்சிகள் மற்றும் பல்லிகள் அதிகம் வரும் இடங்களில், குறிப்பாக இரவு நேரங்களில், இந்த திரவத்தை ஸ்ப்ரே செய்யவும். சமையலறை சுவர்கள், அலமாரிகள், சிங்க் அடியில உள்ள பகுதிகள், மற்றும் வீட்டின் மூலை முடுக்குகளில் தெளிக்கலாம். இதன் பலனை உடனடியாகக் காண்பீர்கள்!
முக்கிய குறிப்பு:
இந்த திரவம் குழந்தைகளுக்கு எட்டாதவாறு பாதுகாப்பாக வைக்கவும்.
இந்த எளிய, இயற்கையான முறையைப் பின்பற்றி உங்கள் வீட்டை கரப்பான் பூச்சி மற்றும் பல்லி தொல்லையிலிருந்து விடுவித்து, ஆரோக்கியமான மற்றும் சுகாதாரமான சூழலைப் பெறுங்கள்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.