யம்மியான தேங்காய் பிஸ்கட் ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
மைதா மாவு - 100 கிராம்
வெண்ணெய் - 80 கிராம்
சர்க்கரை - 40 கிராம்
வறுத்த தேங்காய் துருவல் - 25 கிராம்
வெனிலா சுகர் பவுடர் - அரை டீஸ்பூன்
பாதாம் பருப்பு தூள் - 15 கிராம்
உப்பு - சிறிதளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் உருக்கிய வெண்ணெய்யுடன் வறுத்த தேங்காய் துருவல், பாதாம் பருப்பு தூள் சேர்த்து கலந்து வைக்கவும். அடுத்து அதில் சர்க்கரை மைதா மாவு, வெனிலா சுகர் வவுடர் சிறிது உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். இப்போது இதை சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும்.
இப்போது இந்த மாவை கவர் செய்து அரை மணி நேரம் ஃபிரிட்ஜில் வைக்கவும். அதன் பின் எடுத்து இப்போது எப்போது போல் சப்பாத்தி போல் திரட்டி விருப்பமான வடிவங்களில் நறுக்கி எண்ணெய் தடவிய ட்ரேயில் சிறிது இடைவெளி விட்டு வைக்கவும்.
அடுத்து 180 டிகிரியில் ப்ரீ ஹீட் செய்யப்பட்ட மைக்ரோவேவ் அவனில் 15 நிமிடம் வரை வேகவைத்து எடுத்தால் யம்மியான தேங்காய் பிஸ்கட் ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“