புதுவித ரெசிபி; தேங்காய் சேர்த்த யம்மி சீஸ் கேக்: இப்படி வீட்டில் செய்யுங்க

கோக்கனட் சீஸ் கேக் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

கோக்கனட் சீஸ் கேக் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Cake.jpg

சுவை நிறைந்த கோக்கனட் சீஸ் கேக் ரெசிபி  செய்வது குறித்து இங்கு பார்ப்போம். 

Advertisment

தேவையான பொருட்கள்

பிஸ்கெட்- 250 கிராம் 
வெண்ணெய்- 100 கிராம் 
சீஸ் கிரீம்- 500 கிராம் 
க்ரீம்- 250 கிராம் 
தேங்காய் பொடி- 100 கிராம் 
ஒயிட் சாக்கலேட்- 250 கிராம் 
ஜெலட்டின் 2 ஸ்பூன்

செய்முறை

Advertisment
Advertisements

முதலில் ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதில் பிஸ்கெட்டுகளை போட்டு நன்றாக பொடித்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.  இதனை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் வெண்ணெயை உருக்கி சேர்த்து கலந்து வைத்துக் கொள்ள  வேண்டும். 

அதனை கேக் மோல்டில் பேஸ்மெண்டாக போட வேண்டும். அதன்பிறகு மற்றொரு பாத்திரத்தில் சீஸ் கிரீம் மற்றும் கிரீம் போட்டு நன்றாக கலக்க வேண்டும் இதனுடன் ஒயிட் சாக்லேட், தேங்காய் பொடி சேர்த்து நன்றாக கலக்கவும். அதனையும் நாம் ஏற்கனவே செய்து வைத்துள்ள பிஸ்கெட் பேஸ்மெண்டில் ஊற்ற வேண்டும். அதற்கு மேல் ஊற்றுவதற்காக ஒரு ஒயிட் சாக்லேட்டில் க்ரீம் சேர்த்து நன்றாக கிளறி அதனையும் டாப்பிங்கிற்காக ஊற்ற வேண்டும். பின்னர் தேங்காய் பொடியை மேலே தூவி விட வேண்டும்.

தேவைப்பட்டால் அதன் மேல் பாதாம், முந்திரி, வால்நட் கலவைகளை பொடித்து சேர்த்து தூவலாம். இப்போது கேக்கை 1  மணிநேரம் ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும். பின்னர் எடுத்தால் சுவையான, ருசியான 
கோக்கனட் சீஸ் கேக் ரெடி.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Food

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: