Coconut chutney tamil video, dry coconut chutney recipe: தேங்காய் சட்னியை நம் வாழ்க்கையில் இருந்து ஒதுக்கிவிட முடியாது. இட்லி, தோசையில் ஆரம்பித்து, புளியோதரை- தக்காளி சாதம் வரை தேங்காய் சட்னி இல்லாமல் பலருக்கும் சாப்பிட முடியாது.
Advertisment
தேங்காய்ச் சட்னியின் பலவீனமே அதிக நேரம் தாங்காது. மதிய உணவுக்குகூட அதை எடுத்துச் செல்ல முடியாது. இந்த பலவீனத்தை தவிர்க்க தேங்காயை வறுத்து சட்னி செய்யலாம். இது எளிதில் கெட்டுப் போகாமலும் டேஸ்டாகவும் இருக்கும்.
Dry coconut chutney recipe: தேங்காய் சட்னி
Advertisment
Advertisements
வறுத்து அரைத்த தேங்காய் சட்னி செய்யத் தேவையான பொருட்கள்: தேங்காய் துருவல் - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 4, உளுந்தம்பருப்பு - 2 டீ ஸ்பூன், கடலைப் பருப்பு - 3 டீ ஸ்பூன், புளி, கறிவேப்பிலை, எண்ணெய் - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப.
வறுத்து அரைத்த தேங்காய் சட்னி செய்முறை :
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலையை வறுக்க வேண்டும். பின்னர் தேங்காய் துருவல் சேர்த்து பொன்னிறமாக வறுத்து ஆற வையுங்கள்.
நன்றாக ஆறியதும் அதனுடன் உப்பு, சிறிதளவு புளி சேர்த்து, தண்ணீர் தெளித்து கெட்டியாக, நைசாக அரைத்து கொள்ள வேண்டும். இப்போது சுவையான வறுத்து அரைத்த தேங்காய் சட்னி ரெடி.
மிக எளிமையான செய்முறை கொண்ட சத்தான தேங்காய் சட்னியை செய்து மகிழுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"