சுவையான தேங்காய் தோசை ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
தேங்காய்த் துருவல் – 2 கப்
பச்சரிசி – 200 கிராம்
எண்ணெய் – 100 மில்லி
உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் பச்சரிசியை தண்ணீரில் 1 மணி நேரம் ஊற வைத்து, மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு அதனுடன் உப்பு, தேங்காய்த் துருவல் சேர்க்கவும். அவ்வளவு தான் மாவு ரெடி. இப்போது அடுப்பில் தோசைக் கல் வைத்து இந்த மாவை ஊற்றி எண்ணெய் விட்டு இருபுறமும் வேக வைத்து எடுத்தால் சுவையான தேங்காய் தோசை தயார். இட்லி பொடி இதற்கு சூப்பர் காம்போவாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“