/indian-express-tamil/media/media_files/YsZXbCQeMX87Lh5TqiXB.jpg)
How to remove fresh coconut from shell
அனைத்து வகை இந்திய சமையல்களிலும் தேங்காய் பிரதானமாக பயன்படுத்தப்படுகிறது.. ஆனால், அந்த தேங்காய்யை உடைப்பது எளிதான காரியமல்ல என்பது தினசரி சமைக்கும் அனைவருக்கும் தெரியும்.
தேங்காய் உடைப்பது ஒரு பெரிய வேலை என்றால், தேங்காய் சிரட்டையில் இருந்து தேங்காயை பிரித்தெடுப்பது எவ்வளவு கஷ்டம் என சொல்ல தேவையே இல்லை.. அதுவும் கொஞ்சம் முத்தின தேங்காய் என்றால், தேங்காய் ஓட்டோடு ஓட்டிக் கொண்டு, அதை தனியாக பிரித்து எடுப்பதற்குள் ஒரு வழியாகி விடுவோம்..
ஆனால் இனி தேங்காயை சிரட்டையிலிருந்து தனியாக பிரிப்பது அவ்வளவு பெரிய வேலையாக இருக்காது. IAS அதிகாரி சுப்ரியா சாஹு ஒருமுறை
For all tengai தேங்காய் (coconut) lovers here is a cool hack for our much loved coconut chutneys. video- 5.Min.Crafts pic.twitter.com/DGicUSFLSW
— Supriya Sahu IAS (@supriyasahuias) November 3, 2022
உடைத்த பாதி தேங்காயை அடுப்பில் தீயில் வைத்து விடுங்கள். சிறிது நேரம் கழித்து அந்த தேங்காயை எடுத்து ஒரு நீர் ஊற்றிய கிண்ணத்தில் வைத்தால் போதும். என்ன ஒரு அதிசயம்
சிரட்டையிலிருந்து தேங்காய் மட்டும் தனியாக வந்து விடும்.
தேங்காயை அடுப்பில் வைப்பதால், அந்த வெப்பம் தேங்காய் சதைக்குள் எண்ணெயை செயல்படுத்துகிறது, இதனால் வெளிப்புற ஓடு தளர்ந்து பலவீனமடைகிறது.
அடுத்தமுறை வீட்டில் தேங்காய் துருவ கஷ்டப்படும் போது இந்த குறிப்பை மறக்காம முயற்சி பண்ணுங்க..
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.