ஒரு முறை இப்படி தேங்காய் குச்சி ஐஸ்கிரீம் செய்து பாருங்க. செம்ம ஈசியான ரெசிபி.
தேவையான பொருட்கள்
ஒரு மூடி தேங்காய்
தேங்காய் தண்ணீர்
பால் பவுடர் 4 டேபிள் ஸ்பூன்
3 டேபிள் ஸ்பூன் சர்க்கரை பொடி
அரை கப் பால்
செய்முறை: தேங்காய்யின் பிரவுன் பகுதியை நீக்கிவிட்டு, தேங்காய் துண்டுகளை, தேங்காய் தண்ணீர் சேர்த்து அரைத்துகொள்ளவும். தொடர்ந்து இதை ஒரு பாத்திரத்தில் சேர்த்து கொள்ளவும். அதில் பால் பவுடர் சேர்க்கவும், சர்க்கரை பொடியை சேர்க்கவும், பால் சேர்த்து கொள்ளவும். இதை நன்றாக கிளரவும். தற்போது இதை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதன் மீது பிளாஸ்டிக் கவரால் கட்ட வேண்டும். இதை 10 மணி நேரம் ப்ரீசரில் வைக்கவும். தொடர்ந்து இந்த பாத்திரத்தை எடுத்து பார்த்தால் தேங்காய் குச்சி ஐஸ் ரெடி. இதில் நாம் ஐஸ்கிரீம் குச்சிகளை குத்தியும். அதை தனியாக எடுத்து சாப்பிடலாம்.