Advertisment

செஃப் தீனா ஸ்பெஷல்; அருமையான தேங்காய் பொடி: 10 நாள் கூட வெச்சு சாப்பிடலாமாம்

தேங்காய் இட்லி பொடி ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Coc idli

செஃப் தீனா செய்த சுவையான  தேங்காய் இட்லி பொடி ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

Advertisment

தேவையானவை 

தேங்காய் 1 பெரிய அளவு

புளி -  சிறிதளவு 

இஞ்சி - 1 டீஸ்பூன்

சீரகம் - 3 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு- 6 - 7 டீஸ்பூன் 

சிவப்பு மிளகாய் - 12 முதல் 15 

பூண்டு - 6 முதல் 8 பல்

மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்

வெல்லம் ஒரு சிட்டிகை

உப்பு- தேவைக்கேற்ப

பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு 

தேங்காய் எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை 

கடாயில் தேங்காய் எண்ணெய் சேர்த்து இஞ்சி, பச்ச புளி, சீரகம்,  உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து, கறிவேப்பிலை சிறிதளவு போடவும். மிதமான தீயில் வைத்து வறுக்கவும். அடுத்து இடித்த பூண்டு, தேங்காய் சேர்க்கவும். 

வறுத்த பின் உப்பு கொஞ்சம், பெருங்காய் தூள், மிளகாய் தூள் சேர்க்கவும். கடைசியாக வெல்லம் போடவும். இப்போது அடுப்பை நிறுத்தி தனியாக எடுக்கவும். ஆறவிட்ட பின் மிக்ஸியில் போட்டு அரைக்கவும். இப்போது சுட சுட இட்லியில் வைத்து சாப்பிடலாம்.  

 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment