சுவையான இளந்தேங்காய் குழம்பு செய்வது குறித்து இங்கு பார்போம். சுடு சாதம், தயிர் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
சின்ன வெங்காயம் – 1 கப்
முற்றாத இளம் தேங்காய் – 1 மூடி
தக்காளி – 4
புளி – சிறிதளவு,
மிளகாய் தூள் – இரண்டரை டீஸ்பூன்
தனியா தூள்- ஒன்றரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கடுகு- அரை டீஸ்பூன்
வெந்தயம் – அரை டீஸ்பூன்
சீரகம் – அரை டீஸ்பூன்
எண்ணெய் – கால் கப்
செய்முறை
வெங்காயத்தைத் தோலுரித்து, நறுக்கி எடுத்துக் கொள்ளவும். தேங்காயை பல்லுப்பல்லாக நறுக்கிக் கொள்ளுங்கள். புளியை 2 கப் தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும். அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, வெந்தயம், சீரகம் சேர்த்து பொன்னிறமானதும் வெங்காயத்தை சேர்க்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் நறுக்கிய தக்காளியையும் போட்டு, சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். அத்துடன் புளித்தண்ணீரை ஊற்றுங்கள். அதில் மிளகாய் தூள், தனியா தூள்,நறுக்கிய தேங்காய், தேவையான உப்பு சேர்த்து சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். நன்கு கொதி வந்ததும் கெட்டியான பிறகு இறக்கவும். அவ்வளவு தான் சுவையான இளந்தேங்காய் குழம்பு ரெடி. சுடு சாதம், தயிர் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“