இப்படி ஒரு முறை தேங்காய் பால் ரசம் செய்தால், மீண்டும் மீண்டும் சாப்பிடத் தோன்றும். அப்படி ஒரு நல்ல ரெசிபி.
தேவையான பொருட்கள்
தக்காளி – 2
பச்சை மிளகாய் – 4
ஒரு கொத்து கருவேப்பிலை
ஒரு கொத்து கொத்தமல்லி
கட்டி பெருங்காயம் 1 துண்டு
மஞ்சள் பொடி சிறிய அளவு
தேங்காய் பால் -2 கப்
கடுகு – ஒரு ஸ்பூன்
மிளகு – ஒரு ஸ்பூன்
வெந்தயம் – கால் ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
தாளிக்க – எண்ணெய், கடுகு, வத்தல்
செய்முறை: ஒரு பாத்திரத்தில் பச்சை மிளகாய், தக்காளி, கொத்தமல்லி, கருவேப்பிலை பெருங்காயம், மஞ்சள் பொடி, காயம் சேர்த்து கையால் நன்றாக பிசைந்து கொள்ளவும். தொடர்ந்து, இதில் புளி தண்ணீர் உற்றி அடுப்பில் கொதிக்க வைக்கவும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் சீரகம், மிளகு, வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து வறுக்க வேண்டும். இதை இடித்து, கொதிக்கும் ரசத்தில் சேர்க்கவும். தொடர்ந்து தேங்காய் பால் சேர்க்கவும். ஒரு கொதி வந்ததும், அதில் எண்ணெய், கடுகு, வத்தல் சேர்த்து தாளித்து தேங்காய் பால் ரசத்தில் கொட்டவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“