அழகு பராமரிப்பில் அதீத ஆர்வம் கொண்டவரா? இருக்கவே இருக்கு தேங்காய் எண்ணெய் …

Coconut oil as beauty reagent : தேங்காய் எண்ணெயை கண்களுக்குக் கீழ் தேய்த்து மசாஜ் செய்து அப்படியே விட்டால் கண்கள் இழந்த பொலிவைப் பெறும்.

Beauty,how,use,coconut,oil,face,care, தேங்காய் எண்ணெய், அழகு, பராமரிப்பு
Beauty,how,use,coconut,oil,face,care, தேங்காய் எண்ணெய், அழகு, பராமரிப்பு

உடல் வெப்பத்தைத் தணிக்கவும், ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சிக்கும் தேங்காய் எண்ணெய் ஒரு முக்கிய பொருள். ஆனால் தேங்காய் எண்ணெய்யை வைத்து அழகையும் பராமரிக்கலாம் என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்.

மாய்ஸ்சரைஸர் : வறண்ட சருமம் இருப்போர் தேங்காய் எண்ணெயை முகம், கை கால்களில் தடவிக் கொள்வதால் சருமம் வெடிக்காது.

சூரிய ஒளி பாதிப்புகளிலிருந்து பாதுகாக்கும் : கை கால்களில் தேங்காய் எண்ணெயை அப்ளை செய்தால் சூரிய வெளிச்சம் நேரடியாக படாது. அதேசமயம் ஈரப்பதத்தையும் அளிக்கும்.

கண்களுக்கான கிரீம் : கண்களுக்குக் கீழ் கருமை, வீக்கம் என அழகைக் கெடுக்கும் வகையிலான பிரச்னைகளுக்கு ஒரு துளி தேங்காய் எண்ணெயை கண்களுக்குக் கீழ் தேய்த்து மசாஜ் செய்து அப்படியே விட்டால் கண்கள் இழந்த பொலிவைப் பெறும்.

மேக்அப் ரிமூவர் : தினமும் மேக் அப் அப்ளை செய்கிறீர்கள் என்றால் தேங்காய் எண்ணெயை காட்டனில் முக்கி, ரிமூவ் பண்ணலாம்

ஃபேஸ் மாஸ்க் : தேங்காய் எண்ணெயில் ஒரு ஸ்பூன் மஞ்சள் அல்லது பேக்கிங் சோடா ஏதேனும் ஒன்றை கலந்து நன்குக் கலக்கி முகத்தில் தேய்த்து 7 – 10 நிமிடங்கள் கழித்து கழுவினால் சருமம் மென்மையாக இருக்கும்.

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Coconut oil as best beauty cosmetics

Next Story
வி.ஜே-வா அறிமுகமான மகாலட்சுமி, சீரியல்கள்ல தவிர்க்க முடியாத இடத்தைப் பிடிச்சிருக்காங்க!Maha Lakshmi Serial artist, sun tv chithi 2
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com