ஒரு முறை இந்த தேங்காய் பால்கோவா செய்து பாருங்க. செம்ம சுவையா இருக்கும்.
தேவையான பொருட்கள்
ஒரு டேபிள் ஸ்பூன் நெய்
1 கப் துருவிய தேங்காய்
1 ½ கப் காய்ச்சிய பால்
¼ கப் சர்க்கரை
குங்குமப் பூ சிறிய அளவு
2 ஏலக்காய் இடித்தது
பாதாம் நறுக்கியது 1 ஸ்பூன்
செய்முறை : ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து துருவிய தேங்காய் சேர்க்கவும். தேங்காயில் பிரவுன் நிற பகுதி சேர்க்காமல், துருவியதை சேர்க்கவும். 2 நிமிடங்கள் வதக்கவும். தொடர்ந்து காய்ச்சிய பாலை சேர்க்கவும். தொடர்ந்து இதை கிளரவும். நன்றாக கட்டியாக மாறும் வரை கிளரவு. அடிக்கடி கிளர வேண்டாம். சில நிமிடங்களுக்கு ஒரு முறை கிளரினால் போதும். தொடர்ந்து குங்குமப் பூ சேர்க்கவும். தொடர்ந்து சர்கக்ரை சேர்க்கவும். கரைந்ததும், ஏலக்காய் இடித்ததை சேர்க்கவும். கடைசியாக பாதாம் நறுக்கியதை சேர்த்து கிளரவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“