ஒரு முறை தேங்காய் பாயசத்தை இப்படி செய்து பாருக்கவும். சுவை செம்மையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
1 ஸ்பூன் பச்சரிசி
1 கப் தேங்காய்
2 கப் தண்ணீர்
2 ஸ்பூன் நெய்
1 ஸ்பூன் முந்திரி
1 ஸ்பூன் திராட்சை
¾ கப் வெல்லம்
ஏலக்காய் பொடி கால் ஸ்பூன்
செய்முறை: ஒரு பாத்திரத்தில் பச்சரிசியை ஊற வைக்கவும். இத்துடன் தேங்காய் சேர்த்து தண்ணீர் சேர்த்து அரைத்துகொள்ளவும். தொடர்ந்து இதில் 2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். தொடர்ந்து அதில் வெல்லம் சேர்த்து கிளரவும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து முந்திரி, திராட்சை சேர்த்து வறுக்கவும். இதை பாயசத்தில் சேர்த்து கொதிக்க வைக்கவும். தொடர்ந்து ஏலக்காய் பொடி சேர்த்து கிளரவும்.