Advertisment

தேங்காய் வைத்து இப்படி ஒரு உணவா? கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க

தேங்காய் ரைய்தா செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
coconut

சுவையான தேங்காய் ரைய்தா ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம். 

Advertisment

தேவையான பொருட்கள் 

தேங்காய் துண்டுகள் - ½ கப் 
பச்சை மிளகாய் - 2 
சர்க்கரை-கால் டீஸ்பூன் 
தயிர் -1 கப் 
நெய் - 1 டேபிள் ஸ்பூன் 
சீரகம் - 1 டீஸ்பூன் 
கொத்தமல்லித் தழை - 1 கைப்பிடி 
உப்பு - தேவையான அளவு

செய்முறை 

தேங்காய் துண்டுகளுடன், நறுக்கிய பச்சை மிளகாய், சர்க்கரை, உப்பு கலந்து மிக்சியில் போட்டு அரைத்து எடுக்கவும்.. பின்னர் அதில் தயிர் சேர்த்து மீண்டும் ஒருமுறை அரைக்க வேண்டும். இந்த கலவை கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். 

அடுத்து அடுப்பில் கடாய் வைத்து நெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும். பின்னர் அதில் சீரகத்தை சேர்த்து இறக்கவும்.  இப்போது தேங்காய் கலவையில் இந்த தாளிப்பைக் கொட்டி அதன் மீது கொத்தமல்லித்தழையை தூவினால் சுவையான  தேங்காய் ரைய்தா  ரெடி. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Food
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment