இன்றைய சூழலில் பெரும்பாலானோர் வீடுகளில் ஃப்ரிட்ஜ் என்பது அத்தியாவசிய பொருளாக மாறியுள்ளது. குறிப்பாக, வேலைக்கு செல்வோர் தங்களுக்கு தேவையான பொருள்களை குறிப்பிட்ட அளவிற்கு வாங்கி ஃப்ரிட்ஜ்-ல் அடுக்கி வைப்பார்கள்.
இப்படி பல வகைகளில் ஃப்ரிட்ஜ் நமக்கு பெரும் உதவியாக இருந்து வருகிறது. ஆனால், மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளின் போது ஏற்படும் மின் தடையினால் ஃப்ரிட்ஜ்-ல் வைத்திருக்கும் பொருள்கள் கெட்டுப் போகும் சூழல் உருவாகும். இதனை தடுப்பதற்கு ஒரு தேங்காய் சிரட்டை இருந்தாலே போதுமானது.
இந்த டிப்ஸை ஃபாலோ செய்வதற்கு ஒரு பிளாஸ்டிக் டப்பா மற்றும் ஒரு தேங்காய் சிரட்டை இருந்தால் போதும். தேங்காய் சிரட்டையை பிளாஸ்டிக் டப்பாவிற்குள் போட்டு, டப்பா முழுவதும் தண்ணீர் நிரப்ப வேண்டும். இவ்வாறு தண்ணீர் நிரப்பியை டப்பாவை எடுத்து ஃப்ரிட்ஜ்-ல் இருக்கும் ஃப்ரீசரில் சுமார் 8 மணி நேரம் வைக்க வேண்டும்.
அதன் பின்னர், டப்பாவிற்குள் இருக்கும் தேங்காய் சிரட்டை மற்றும் தண்ணீர் ஐஸ் கட்டி பதத்திற்கு இறுகியதும், அதனை ஃப்ரீசரில் இருந்து எடுத்து ஃப்ரிட்ஜ்-ன் சாதாரண அறையில் வைக்க வேண்டும். இவ்வாறு வைப்பதன் மூலம் ஒரு நாள் முழுவதும் மின் தடை ஏற்பட்டாலும் ஃப்ரிட்ஜ்-ல் இருக்கும் பொருள்கள் எளிதில் கெடாமல் இருக்கும்.
ஐஸ்கட்டிக்குள் இருக்கும் தேங்காய் சிரட்டை, அதனை விரைவில் உருகி விடாமல் பார்த்துக் கொள்வதால், இந்த முறை கையாளப்படுகிறது. இதேபோல், வெயில் நேரங்களில் இவ்வாறு ஐஸ்கட்டி சிரட்டையை எடுத்து மின்விசிறியின் கீழ் வைத்தால் அறை முழுவதும் குளிர்ச்சியாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“