காபி பொடி கூட மஞ்சள் சேர்த்தா இப்படி ஒரு மேஜிக்; முகத்தை இன்ஸ்டன்ட் பொலிவாக மாற்றும் சிம்பிள் ஃபேஸ்பேக்
நம் முகத்தை இன்ஸ்டன்ட் பொலிவாக மாற்றும் சிம்பிளான ஃபேஸ்பேக்கை எப்படி தயாரிப்பது என இந்த செய்திக் குறிப்பில் பார்க்கலாம். இதனை வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு சுலபமாக செய்யலாம்.
எப்போதும் முகத்தை பொலிவாக வைத்திருக்க வேண்டும் என்றால் அதற்காக சில சரும பராமரிப்பு முறையை பின்பற்ற வேண்டும். மேலும், ஒவ்வொரு சீசனுக்கும் ஏற்றார் போல் இவற்றை மாற்றிக் கொள்வதும் அவசியமாகும். எனினும், இதில் சிலர் ஆர்வமின்றி இருப்பார்கள்.
Advertisment
சரும பராமரிப்பு என்பது அழகு சார்ந்தது என்று சொல்வதை விட ஆரோக்கியத்திற்கு தொடர்புடையது. அந்த வகையில் இதற்கென கொஞ்ச நேரம் செலவிடத்தான் வேண்டும். அதற்காக கடைகளில் இருந்து ஏராளமான ஃபேஸ் கிரீம், சீரம் போன்ற பொருட்களை வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
சாதாரணமாக நம் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு இதனை செய்திட முடியும். இவ்வாறு செய்யும் போது அதிக செலவும் ஆகாது, நேரமும் மிச்சமாகும். அதற்கு தகுந்த வகையில் இந்த வெயில் காலத்தில் அனைவரும் பின்பற்றக் கூடிய சிம்பிளான ஃபேஸ்பேக் எப்படி தயாரிப்பது என காணலாம்.
இதற்காக ஒரு ஸ்பூன் காபி பொடி, மஞ்சள் தூள் மற்றும் சிறிதளவு யோகர்ட் ஆகிய மூன்றையும் சேர்த்து பசை பதத்திற்கு கலந்து கொள்ளலாம். இவ்வாறு செய்தால் சிம்பிளான ஃபேஸ்பேக் ரெடியாகி விடும். இதனை நம் முகத்தில் தடவி விட்டு சுமார் 10 நிமிடங்களுக்கு பின்னர் கழுவி விடலாம்.
Advertisment
Advertisements
இதை செய்வதற்கு அதிக நேரம் எடுக்காது. மேலும், வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு செய்து முடித்து விடலாம். இந்த ஃபேஸ்பேக்கை பயன்படுத்துவதன் மூலம் நம் முகமும் பார்ப்பதற்கு பொலிவாக மாறிவிடும்.
நன்றி - Vj Beauty Tipz Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.