வெயில் காலத்தில் காபி குடிப்பவரா நீங்கள்?

பழச்சாறுகள், இளநீர், கூழ், மோர் போன்றவை அதிகம் குடிக்கலாம். வெள்ளரி, தர்பூசணி , தக்காளி சூப் வகைகளை சாப்பிடலாம்

coffee, summer, indigestion, body temperature, கோடை வெயில்,காப்பி, அஜீரணம், உடல் வெப்பநிலை
coffee, summer, indigestion, body temperature, கோடை வெயில்,காப்பி, அஜீரணம், உடல் வெப்பநிலை

வெயில் காலத்தில் அதிக காரமான உணவுகள், சூடான உணவுகள், எண்ணெய் பலகாரங்கள் போன்றவற்றை பெரும்பாலும் தவிர்க்கவும். இதுபோன்ற உணவுகள் அஜீரணம் உள்ளிட்ட வயிற்றுக்கோளாறுகளை ஏற்படுத்தும்.

நமது உடலின் தட்பவெப்பநிலை சீராக இல்லாமல், திடீர் என மாறிக்கொண்டே இருப்பது, உடலை வெகுவாக பாதிக்க செய்கிறது. வெயிலின் கொடுமையினால் நம் உடல் மட்டுமல்ல நமது தலைமுடி, கண்கள், சருமம் என அனைத்தையும் உஷ்ணம் ஒரு கை பார்த்துவிட்டுத்தான்
செல்லும்.

அதிக நேரம் வெயிலில் அலைந்து விட்டு குளிர்சாதன அறைக்குள் சென்றால் மோசமான பின்விளைவுகளை உண்டாக்கும். வெயிலின்போது தேவைக்கு அதிகமாக காபி, டீ, உடலுக்கு வேண்டாத குளிர்பானங்கள் போன்றவை மென்மேலும் தாகத்தை தூண்டும். உணவுப் பழக்கங்களும் வெயில் காலத்தில் கவனிக்க வேண்டியது. அதிக காரமான உணவுகள், சூடான உணவுகள், எண்ணெய் பலகாரங்கள் போன்றவற்றை பெரும்பாலும் தவிர்க்கவும்.

வெயில் நேரங்களில் இதுபோன்ற உணவுகள் அஜீரணம் உள்ளிட்ட வயிற்றுக்கோளாறுகளை ஏற்படுத்தும். எனவே இயற்கையான பானங்களை அதிகம் பருக வேண்டும். பழச்சாறுகள், இளநீர், கூழ், மோர் போன்றவை அதிகம் குடிக்கலாம். வெள்ளரி, தர்பூசணி, தக்காளி சூப் வகைகளை சாப்பிடலாம். திராட்சை, சாத்துக்குடி ஆரஞ்சு, எலுமிச்சை,மாதுளை, முலாம் பழம், ஆப்பிள் போன்றவற்றின் பழச்சாறுகளையும் பருகலாம்.

நுங்கு, கொய்யா போன்றவையும் உடல் வெப்பத்தைத் தணிக்க உதவும். வெயில் காலம் முடியும் வரை அனைவருமே ஒரு நாளைக்கு 3 லிட்டர் வரை தண்ணீர் அருந்துங்கள்.

வீட்டில் பிரியாணி, சாம்பார் சாதம், சப்பாத்தி போன்ற உணவுகளுக்கு பதில் நீர் வகையிலான உணவுகளை அதிகம் எடுத்து கொள்ளுங்கள். மண் பானையில் நீர் ஊற்றி வைத்து மண்பானையில் இருந்து கிடைக்கும் குளிர்ந்த நீரை குடிக்கலாம்.

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Coffee lovers indigestion problem high temperature time

Next Story
உடல் எடையைக் குறைக்கும் ஆப்ரிகாட் பழங்கள்Diet Tips : High fibre fruit Apricot benefits
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com