கோவை சின்னவேடம்பட்டி மற்றும் சேரன்மாநகர் பகுதியிலுள்ள முல்லை தற்காப்பு மற்றும் விளையாட்டு கழகத்தில் ஐந்து வயது முதலான மாணவ மாணவிகளுக்கு தமிழக பாரம்பரிய கலைகளான சிலம்பம், அடிமுறை, வேல்கம்பு, வாள்வீச்சு, வளரி மான்கொம்பு, சுருள்வாள், வாள்வீச்சு போன்ற , பயிற்சிகள் பாரம்பரியம் மாறாமல் கற்றுத் தரப்பட்டு வருகிறது.
இங்கு நன்கு பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகள் பலர் உலக சாதனையாளர்களாகவும் ஜொலித்து வருகின்றனர்.
இந்நிலையில் இதே பயிற்சி கழகத்தில் பயிற்சி பெற்று வரும் சின்னவேடம்பட்டி பகுதியை கார்த்திக் குமார், சரண்யா தேவி ஆகியோரின் மகனான பாலமுரளி கிருஷ்ணா தொடர்ந்து 20 மணி நேரம் 23 நிமிடங்கள் தொடர்ந்து சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்துள்ளார் .

11 வயதே ஆன பாலமுரளி கிருஷ்ணா செய்த இந்த உலக சாதனை இந்தியா உலக சாதனை புத்தகம், அமெரிக்கன் உலக சாதனை புத்தகம் மற்றும் யூரோப்பியன் உலக சாதனை புத்தகம் என மூன்று உலக சாதனை புத்தகங்களில் இடம் பிடித்தது.
சாதனை சிறுவனுக்கு இந்தியா புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்டு கோவை மாவட்ட தலைவர் பிரகாஷ்ராஜ் பாராட்டுகளை தெரிவித்தார். தொடர்ந்து பாலமுரளிகிருஷ்ணாவிற்கு பதக்கம், சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.
ஆண்ட்லி பிளாக் பெல்ட் அகாடமியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் துணை பயிற்சியாளர்கள், முல்லை தற்காப்புக் கலை மற்றும் விளையாட்டுக் கழகம் மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“