தொடர்ந்து 3 நிமிடம் குக்குட் ஆசனம்- கோவை சிறுவன் கின்னஸ் சாதனை

ரூஸ்டர் போஸ் எனும் குக்குட் ஆசனத்தை தொடர்ந்து மூன்று நிமிடங்கள் செய்து கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த சிறுவன் ரெஹானை பலரும் பாராட்டி வருகின்றனர்.

ரூஸ்டர் போஸ் எனும் குக்குட் ஆசனத்தை தொடர்ந்து மூன்று நிமிடங்கள் செய்து கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த சிறுவன் ரெஹானை பலரும் பாராட்டி வருகின்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Coimbatore

Coimbatore 11 years boy Guinness record in in yoga

கோவையில் 11 வயது சிறுவன் ரெஹான், குக்குட் ஆசனத்தில் நீண்ட நேரம் நின்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.

Advertisment

கோவை கணபதியை சேர்ந்த மருத்துவர் மஜீத்,நஜாத் தம்பதியரின் மகன் ரெஹான். ஆறாம் வகுப்பு படித்து வரும் ரெஹான் தனது நான்கு வயது முதலே அவரது வீட்டின் அருகே உள்ள ஓசோன் யோகா மையத்தி்ல் யோகா கற்று வந்துள்ளார்.

மறைந்த யோகா பாட்டி  நானம்மாள் மற்றும் அவரது மகன் பாலகிருஷ்ணனிடம் யோகா பயின்ற  சிறுவன் ரெஹான்  யோகாவின் முக்கிய ஆசனங்களான ஏகபாதசிராசனம், துவிபாத சிரசாசனம், யோக நித்ரா, பத்மாசனம், துருவாசன் போன்ற ஆசனங்களை எளிதாக செய்வதோடு மாவட்ட, மாநில, தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு  ஐம்பதிற்கும் மேற்பட்ட பதக்கம் மற்றும் பரிசுகளை வாங்கி குவித்துள்ளார்.

Coimbatore 11 years boy Guinness record in yoga
Advertisment
Advertisements
Coimbatore 11 years boy Guinness record in yoga
Coimbatore 11 years boy Guinness record in yoga
Coimbatore 11 years boy Guinness record in yoga
Coimbatore 11 years boy Guinness record in yoga

அண்மையில் ரூஸ்டர் போஸ் எனும்  குக்குட்  ஆசனத்தை தொடர்ந்து மூன்று நிமிடங்கள் செய்து கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில்  இடம் பிடித்த சிறுவன் ரெஹானை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இது குறித்து ரெஹானின் தாயார் நஜாத் கூறுகையில், சிறு வயதில் சளி, இருமல் போன்ற தொந்தரவுகளில் இருந்து விடுபட யோகா கலையில் ரெகானை ஈடுபடுத்தினோம். தற்போது வரை பத்துக்கும் மேற்பட்ட உலக சாதனைகளை செய்துள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.

செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: