கோவையில் 24 மணி நேர ரத்த வங்கி: செஞ்சிலுவை சங்கம் ஏற்பாடு

கோவை அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை நோயாளிகளுக்கு இரத்த சேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் செஞ்சிலுவை சங்கத்தின் புதிய ரத்த வங்கியை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் திறந்து வைத்தார்.

கோவை அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை நோயாளிகளுக்கு இரத்த சேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் செஞ்சிலுவை சங்கத்தின் புதிய ரத்த வங்கியை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் திறந்து வைத்தார்.

author-image
WebDesk
New Update
Coimbatore 24 Hour Blood Bank Organized by Indian Red Cross Society Tamil News

24 மணி நேரமும் செயல்படும் இந்த ரத்த வங்கி மருத்துவமனைகள், தனி நபர்களுக்கு சேவையை வழங்குகிறது.

பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்

coimbatore:கோவை அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை நோயாளிகளுக்கு இரத்த சேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் (இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி) புதிய ரத்த வங்கியை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் திறந்து வைத்தார். 

Advertisment

அதிநவீன உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய ரத்த வங்கி கவுண்டம்பாளையத்தில்  புதிய ரத்த வங்கி தொடங்கப்பட்டுள்ளது. இந்த ரத்த வங்கியை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் இன்று தொடங்கி வைத்தார்.

ரத்த தானம் கொடுப்பவருக்கும், தானம் பெறுபவருக்கும் இடையே உள்ள இடைவெளியை குறைக்கும் விதமாகவும், பராமரித்தல் மற்றும் குணப்படுத்துதலோடு அவசர நேரத்தில் ரத்தம் தேவைப்படுவோர்க்கு உதவுவதை நோக்கமாக கொண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

24 மணி நேரமும் செயல்படும் இந்த ரத்த  வங்கி மருத்துவமனைகள், தனி நபர்களுக்கு சேவையை வழங்குகிறது. இரத்த சேகரிப்பு, சேமிப்பு மற்றும் வழங்கல் ஆகியவை முழுமையான தூய்மையுடன் மேற்கொள்ளப்படும். 

Advertisment
Advertisements

ரத்த தானம் செய்வோரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அவசர நேரத்தில் அவர்களிடம் முறையாக அறிவித்து ரத்த தேவையை பூர்த்தி செய்யும் விதமாக இந்த மையம் தொடங்கப்பட்டுள்ளதாக இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: