கோவை கொடிசியா தொழிற்கூட கண்காட்சி வளாகத்தில் 22வது சர்வதேச வேளாண் கண்காட்சி இன்று தொடங்கியது. சர்வதேச அளவில் நடைபெறும் இந்த கண்காட்சி வரும் 15ஆம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது.
2/6
வழக்கமாக நான்கு நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சி இந்த ஆண்டு ஐந்து நாட்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
3/6
இதில் 450க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு வேளாண் விவசாய பொருட்கள் காட்சிபடுத்தப்பட்டுள்ளன.
Advertisment
4/6
இந்த கண்காட்சியில் பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த வேளாண் நிறுவனங்களும், மலேசியா, சிங்கப்பூர், சீனா, தென்கொரியா உட்பட பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களும் அவர்களது கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தி உள்ளனர்.
5/6
இந்தியாவை சேர்ந்த நாட்டு மாடுகளும் வெளிநாட்டு வகை ஆடுகளும் இந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
6/6
மேலும் பல்வேறு விதைகள், இயற்கை குளிரூட்டிகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தோட்டக்கலை சார்பில் நர்சரிகளும் அமைக்கப்பட்டு பல்வேறு ரக செடிகள், பூச்செடிகள் ஆகியவை விற்பனை நடைபெறுகிறது.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்