கோவை ஆலந்துறை காமாட்சி அம்மன் கோயில் திருவிழாவில் கொட்டும் மழையில் தீச்சட்டி எடுத்தும், அழகு குத்தி கிரேனில் ஊர்வலமாய் வந்தும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
கோவை ஆலந்துறை காமாட்சி அம்மன் கோயில் 97வது ஆண்டு திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான அழகு குத்தி, பூச்சட்டி எடுக்கும் நிகழ்வு நேற்று இரவு நடைபெற்றது.
இதில் சுமார் 1,000த்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு பூச்சட்டி எடுத்து ஊர்வலமாக சென்று நேர்த்தி கடனை செய்தனர்.
அதேபோல் கிரேன் மூலம் தொங்கியபடி அழகு குத்தியும், பறவை காவடி எடுத்தும் பக்தர்கள் கொட்டும் மழையும் பொருட்படுத்தாமல் வந்து காமாட்சி அம்மனை தரிசனம் செய்தனர்.
மேலும் ஜமாப், கேரளா செண்டை மேளம், கேரளா தையம் ஆட்டம் என பக்தர்கள் திருவிழா கலைகட்டியது. இறுதி நாளான இன்று மஞ்சள் நீராட்டு விழா, இசை நிகழ்ச்சிகளுடன் காமாட்சி அம்மன் கோவில் திருவிழா நிறைவடைகிறது.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“