திராட்சை பழத்தில் இயேசு புகைப்படத்தை வரைந்தும், கத்திரிக்காயில் இயேசு உருவத்தை செதுக்கியும், ஓவியர் ஒருவர் கலை நயத்துடன் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார்.
கோவை குனியமுத்தூர் பகுதியைச் சார்ந்த ஓவியர் யு.எம்.டி.ராஜா வித்தியாசமான முறையில் ஓவியம் வரைந்து அசத்துவது வாடிக்கை. அந்த வகையில் கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு திராட்சை பழத்தில் இயேசு ஓவியத்தை வரைந்து கிறிஸ்தவர்களுக்கு தனது வாழ்த்தை தெரிவித்திருக்கின்றார்.
திராட்சை ரசம் என்பது கிறிஸ்துவ வேதாகமத்தில் இயேசுவின் இரத்தத்திற்கு இணையாக ஒப்பிடப்பட்டுள்ளது. அந்த திராட்சைபழத்தில் இயேசுவின் ஓவியத்தை ராஜா வரைந்துள்ளார். 2024"ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை வாழ்த்து தெரிவிக்கும் விதமாக கலை நயத்துடன் திராட்சை பழத்தில் இயேசு கிறிஸ்துவின் ஓவியத்தை வரைந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதே போல கத்தரிக்காய் ஒன்றில் கிறிஸ்து இயேசுவின் உருவத்தை அச்சு அசலாக புகைப்படம் போல் செதுக்கி உள்ளது அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது. தங்க நகை பட்டறை நடத்தி வரும் ராஜா இதேபோன்று நுணுக்கமான கலை நயத்துடன் பல ஓவியங்களையும், வடிவங்களையும் செதுக்கி உள்ளார்.
பி.ரஹ்மான் கோவை மாவட்டம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“