தென்னிந்திய அளவில் நடைபெற உள்ள கார் பந்தய போட்டிகளுக்கு சியால் ஆட்டோ ஸ்போர்ட்ஸ் லீக் பந்தய கார்களை ஓட்டி கோவை இளைஞர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் சியால் ஆட்டோ கிராஸ் லீக் போட்டி நடைபெற உள்ளது.
சர்வதேச அளவில் பிரபலமான கார் பந்தய போட்டிகளில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள இளைஞர்களை தயார் செய்யும் விதமாக கோவையில் விஷன் 4 மோட்டார் ஸ்போர்ட்ஸ் சார்பாக சியால் ஆட்டோ கிராஸ் லீக் போட்டிகள் நடைபெறுகிறது.
தென்னிந்திய அளவில் நடைபெற உள்ள இந்த போட்டிகளில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள இளைஞர்களை தயார் செய்யும் விதமாக இளைஞர்கள் இணைந்து புதிய பந்தய காரை வடிமைத்துள்ளனர்.
ரேஸ் டிராக்கில் ஓடும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கார் முழுவதும் பாதுகாப்பான முறையில் ரேஸ் டிராக்குகளில் ஓட்டும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ளதாக கார் பந்தய பயிற்சியாளர் தெரிவித்தார்.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் நடைபெற உள்ள சியால் ஆட்டோ கிராஸ் லீக் போட்டிகளில் இந்த கார்களை வீர்ர்கள் ஓட்ட இருப்பதாகவும் இதில் சிறந்த ஓட்டுனர்களை தேர்வு செய்து சாம்பியன்ஷிப் கோப்பை வழங்கப்படும் என போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்