/indian-express-tamil/media/media_files/2025/06/25/whatsapp-image-2025-06-25-17-03-07.jpeg)
Coimbatore
பொதுவாக, புத்தகக் கண்காட்சிகள் என்றாலே, ஒவ்வொரு புத்தகத்திற்கும் தனித்தனியே விலை நிர்ணயிக்கப்பட்டு விற்கப்படும். ஆனால், கோயம்புத்தூர் புரோசோன் மாலில் தற்போது நடைபெற்று வரும் 'கதை கார்னிவல்' புத்தகத் திருவிழா, இந்த வழக்கத்தை உடைத்து, புத்தகங்களை கிலோ கணக்கில் எடை போட்டு வாங்கும் ஒரு புதுமையான வாய்ப்பை வழங்குகிறது. கிள்ளிட்டு போக வேண்டாம், அள்ளிக்கிட்டு போகலாம்! ஆம், இந்தத் திருவிழா புத்தக விரும்பிகளுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.
புரோசோன் மால் மற்றும் யூசுடு புக்கர்ஸ் இணைந்து நடத்தும் இந்த மெகா புத்தகத் திருவிழாவில், குழந்தைகளுக்கான காமிக்ஸ் கதைகள் முதல் அறிவியல், தத்துவம், வரலாறு, தமிழ் மற்றும் ஆங்கில மொழி நாவல்கள் எனப் பரந்த அளவிலான புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. பயன்படுத்தப்பட்ட புத்தகங்களும் இந்த அ கண்காட்சி மற்றும் விற்பனையில் கிடைக்கின்றன.
இங்கு 5 கிலோ புத்தகம் வெறும் ரூ.549 என்ற விலையிலும், குழந்தைகளுக்கான புத்தகங்கள் 1 கிலோ ரூ.549 என்ற விலையிலும் விற்பனை செய்யப்படுகின்றன. இது, வாசகர்கள் தங்கள் விருப்பமான புத்தகங்களை மிகக் குறைந்த விலையில், கிலோ கணக்கில் எடை போட்டு வாங்கிச் செல்ல ஒரு அற்புதமான வாய்ப்பை வழங்குகிறது.
புத்தக விற்பனை மட்டுமின்றி, இத்திருவிழா பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளையும் கொண்டுள்ளது. வாராந்திர நேரடி கதை சொல்லல் நிகழ்வுகள், படைப்புப் பட்டறைகள், குழந்தைகள் விரும்பும் கதாபாத்திரங்களுடன் சந்திப்பு போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
குழந்தைகள், பெற்றோர் மற்றும் அனைத்து வாசகர்களுக்கும் கதைகள் மீதான ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையிலும், ஒரு முழுமையான புத்தக அனுபவத்தை வழங்கும் வகையிலும் இந்த விழா வடிவமைக்கப்பட்டுள்ளது.
கிலோ கணக்கில் எடை போட்டுப் புத்தகங்களை வாங்கிச் செல்லும் இந்தத் தனித்துவமான புத்தகக் கண்காட்சி, கோவை வாசகர்களுக்கு ஒரு மிகச் சிறந்த வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. புத்தக வாசிப்பை ஊக்குவிக்கவும், அனைவரிடமும் கதை சொல்லும் ஆர்வத்தை அதிகரிக்கவும் இது ஒரு அற்புதமான முயற்சி!
பி. ரஹ்மான், கோவை மாவட்டம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.