கோவை புத்தக திருவிழா: கோலாகலமாக தொடக்கம்

கோவை கொடிசியா வளாகத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான புத்தகக் திருவிழா கோலாகலமாக தொடங்கியது. இந்தப் புத்தக திருவிழாவில் லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.

கோவை கொடிசியா வளாகத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான புத்தகக் திருவிழா கோலாகலமாக தொடங்கியது. இந்தப் புத்தக திருவிழாவில் லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.

author-image
WebDesk
New Update
coimbatore book festival begins today Tamil News

கோவை புத்தக திருவிழா தொடக்கம்

கோவை கொடிசியா வளாகத்தில்  2025 ஆம் ஆண்டுக்கான புத்தகக் திருவிழா கோலாகலமாக தொடங்கியது. வருகிற 27 ஆம் தேதி வரை நடைபெற கூடிய இந்த புத்தக திருவிழாவில் 250-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், லட்சக்கணக்கான புத்தகங்கள் காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளது. 

Advertisment

இங்கு கோவை மட்டுமல்லாமல் பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் சார்ந்த  அச்சகங்கள் அவர்களது புத்தகங்களை காட்சிப்படுத்தியுள்ளனர்.  இலக்கியம், இலக்கணம், புராணக் கதைகள்,  குழந்தைகளுக்கான சிறுகதைகள், அரசியல் தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, காமிக்ஸ், அறிவியல் சார்ந்த புத்தகங்கள், அரசு தேர்வுகளுக்கான புத்தகங்கள், பல்வேறு எழுத்தாளர்களின் புத்தகங்கள், கவிதை புத்தகங்களும் மேலும் குழந்தைகளுக்கான செயல்பாடுகள் புத்தகங்கள், கணித செயல்பாடுகள்,போன்றவையும் இடம் பெற்றுள்ளன. 

காலை முதல் மாலை வரை நடைபெறும் இந்த புத்தக திருவிழாவில் நாள்தோறும் மாலை பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

செய்தி: பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.

Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: