20 மணி நேரம் தற்காப்பு கலை... உலக சாதனை படைத்த கோவை சிறுவன்!

20 மணி நேரம் தமிழர்களின் பாரம்பரிய தற்காப்பு கலையை செய்து உலக சாதனைபடைத்துள்ளார் கோவை சிறுவன் ரித்விக் பிரனவ்.

20 மணி நேரம் தமிழர்களின் பாரம்பரிய தற்காப்பு கலையை செய்து உலக சாதனைபடைத்துள்ளார் கோவை சிறுவன் ரித்விக் பிரனவ்.

author-image
WebDesk
New Update
Coimbatore boy done martial arts 20 hours with world record tamil news

Coimbatore boy martial arts 20 hours world record tamil news

பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.

Advertisment

கோவையைச் சேர்ந்த 11 வயது சிறுவன் ரித்விக் பிரனவ் தொடர்ந்து 20 மணி நேரம் தமிழர்களின் பாரம்பரிய தற்காப்பு கலையான சிலம்பத்தில் நெடுங்கம்பு, நடுக்கம்பு சுற்றியும், ஆயுதப் பிரிவுகளான வால் வீச்சு, சுருள் வால் வீச்சு, வேல் கம்பு வீச்சு, மான் கொம்பு வீச்சு மற்றும் வாள் கேடயம் ஆகிய முறைகளைச் செய்து உலக சாதனை படைத்துள்ளார்.

இந்த சாதனையை இந்தியா புக் ஆப் வோர்ல்ட் ரெகார்ட்ஸ், அமெரிக்கன் புக் ஆப் வோர்ல்ட் ரெகார்ட்ஸ் மற்றும் யூரோப்பியன் புக் ஆப் வோர்ல்ட் ரெகார்ட்ஸ் உள்ளிட்ட உலக சாதனை அமைப்ப்பினர் அங்கிகரித்துள்ளனர்.

publive-image
Advertisment
Advertisements

கோவை சின்னவேடம்பட்டி மற்றும் சேரன்மாநகர் பகுதியிலுள்ள முல்லை தற்காப்பு மற்றும் விளையாட்டு கழகத்தில் கடந்த 8 ஆண்டுகளக ஐந்து வயது முதலான மாணவ மாணவிகளுக்கு தமிழக பாரம்பரிய கலைகளான சிலம்பம் , அடிமுறை , வேல்கம்பு , வாள்வீச்சு , வளரி மான்கொம்பு , சுருள்வாள் , வாள்வீச்சு, போன்ற , பயிற்சிகள் பாரம்பரியம் மாறாமல் கற்றுத் தரப்பட்டு வருகிறது.

மேலும் இங்கு நன்கு பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகள் பலர் உலக சாதனையாளர்களாகவும் ஜொலித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று, கோவை விளாங்குறிச்சி பகுதியில் உள்ள தனியார் அரங்கில், வேலுச்சாமி மற்றும் சாந்தி தம்பதியினரின், 11 வயது மகன் ரித்விக் பிரனவ், தமிழர்கள் கொண்டாடும் பாரம்பரிய பொங்கல் திருவிழாவை ஒட்டி இன்று 20 மணி நேரம் தமிழர்களின் பாரம்பரிய தற்காப்பு கலையான சிலம்பத்தில் நெடுங்கம்பு, நடுக்கம்பு சுற்றியும், ஆயுதப் பிரிவுகளான வால் வீச்சு, சுருள் வால் வீச்சு, வேல் கம்பு வீச்சு, மான் கொம்பு வீச்சு மற்றும் வாள் கேடயம் ஆகிய முறைகளைச் செய்து உலக சாதனை படைத்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக செய்தியாளரிடம் பேசிய இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அமைப்பின் கோவை மாவட்ட தலைவர் பிரகாஷ் ராஜ் கூறியதாவது:- 2023ம் ஆண்டு தமிழர்களின் பாரம்பரிய பொங்கல் திருவிழாவை வரவேற்கும் விதமாக, இந்த உலக உலக சாதனை நிகழ்ச்சியை நிகழ்த்தினர். இதனை இந்தியன் புக் ஆப் வெர்ல்டு ரெக்கார்ட்ஸ், அமெரிக்கன் உலக ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் அமைப்பினர், யூரேப்பியன் புக் ஆஃப் வோர்ல்ட் ரெக்கார்ட்ஸ் அமைப்பினர் என மூன்று நிறுவனங்கள் அங்கீகரித்துடன், மாணவனின், சாதனையை, பாராட்டி சான்றிதல்களையும், கோப்பைகளையும்,மெடல்களையும் வழங்கி பெருமை படுத்தி உள்ளதாக கூறினார்.

மேலும் உலக சாதனை படைத்த சிறுவன் நம்மிடம் கூறுகையில், ரித்விக் பிரனவ் கடந்த 6 ஆண்டாக சிலம்பம் பயின்று வருவதாகவும் பொங்கல் திருவிழாவை வரவேற்கும் விதமாக இச்சாதனையை செய்ததாக தெரிவித்தார்.

publive-image

முன்னதாக, நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் சதாம் ஹுசைன், இந்திய உணவுக் கழகத்தின் முன்னாள் ஆலோசணைக் குழு உறுப்பினர் உதய் தீப், தொழில் மற்றும் வர்த்தக அமைச்சகத்தின் இந்திய தரக்கட்டுப்பாடு உறுப்பினர் இராஜேந்திரன் மற்றும் இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் கோவை மாவட்ட தலைவர் பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் சாதனை படைத்த மாணவனுக்கு சான்றிதல்களையும், கோப்பைகளையும், பதக்கங்களையும் வழங்கி பெருமை படுத்தினர்,

இந்த நிகழ்ச்சியில், முல்லை தற்காப்பு கலை அமைப்பின், மேளாளர், கார்த்திக், பொதுமக்கள், மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும், கலந்து கொண்டு, சாதனை படைத்த மாணவர்களுக்கு, பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Lifestyle Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: