கோவையை சேர்ந்த 9 வயது பள்ளி மாணவன் ரிப்பன் கட்டிய சிலம்பத்தை தொடர்ந்து ஏழு மணி நேரம் சுழற்றி சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
Advertisment
கோவை சின்ன வேடம்பட்டி பகுதியை சேர்ந்த செல்வகுமார் - சுதாமணி ஆகியோரின் மகனான ஜிஷ்னு ஜீவித், 9 வயதான பள்ளி சிறுவன் அப்பகுதியில் உள்ள முல்லை தற்காப்பு மற்றும் விளையாட்டு கழகத்தில் சிலம்பம் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் சிறுவனின் புதிய முயற்சியாக ரிப்பன் கட்டிய சிலம்பத்தை தொடர்ந்து ஏழு மணி நேரம் சுழற்றி உலக சாதனை படைத்துள்ளார்.
சர்வதேச தாய்மொழி தினம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சிறுவன் செய்த இந்த சாதனை இந்தியா உலக சாதனை - அமெரிக்கன் உலக சாதனை - யூரோப்பியன் உலக சாதனை என மூன்று உலக சாதனை புத்தகங்களில் இடம் பிடித்தது.
தொடர்ந்து சாதனை மாணவனுக்கு கோப்பை - பதக்கம் - மற்றும் சான்றிதழ்களை வழங்கி கவுரவிக்கப்பட்டது.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“