Advertisment

ஏழு மணி நேரம் ரிப்பன் சிலம்பம் சுழற்றி கோவை சிறுவன் சாதனை

சிறுவனின் புதிய முயற்சியாக ரிப்பன் கட்டிய சிலம்பத்தை தொடர்ந்து ஏழு மணி நேரம் சுழற்றி உலக சாதனை படைத்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Coimbatore

ஏழு மணி நேரம் ரிப்பன் சிலம்பம் சுழற்றி கோவை சிறுவன் சாதனை

கோவையை சேர்ந்த 9 வயது பள்ளி மாணவன் ரிப்பன் கட்டிய சிலம்பத்தை தொடர்ந்து ஏழு மணி நேரம் சுழற்றி சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

Advertisment

கோவை சின்ன வேடம்பட்டி பகுதியை சேர்ந்த செல்வகுமார் -  சுதாமணி ஆகியோரின் மகனான ஜிஷ்னு ஜீவித், 9 வயதான பள்ளி சிறுவன் அப்பகுதியில் உள்ள முல்லை தற்காப்பு மற்றும் விளையாட்டு கழகத்தில் சிலம்பம் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

publive-image
publive-image
publive-image

இந்நிலையில் சிறுவனின் புதிய முயற்சியாக ரிப்பன் கட்டிய  சிலம்பத்தை தொடர்ந்து ஏழு மணி நேரம் சுழற்றி உலக சாதனை படைத்துள்ளார்.

சர்வதேச தாய்மொழி தினம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சிறுவன் செய்த இந்த சாதனை இந்தியா உலக சாதனை - அமெரிக்கன் உலக சாதனை - யூரோப்பியன் உலக சாதனை என மூன்று உலக சாதனை புத்தகங்களில் இடம் பிடித்தது.

தொடர்ந்து சாதனை மாணவனுக்கு   கோப்பை - பதக்கம் - மற்றும் சான்றிதழ்களை வழங்கி கவுரவிக்கப்பட்டது.

செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment