scorecardresearch

துபாயில் ஃபேஷன் ஷோ.. களமாட தயாராகும் கோவை சுட்டீஸ்

துபாயில் வரும் அக்.18ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடைபெற உள்ள சர்வதேச அளவிலான பேஷன் ஷோவில் இந்தியா சார்பில் 7 சிறுவர்கள் பங்கேற்க உள்ளனர்.

Coimbatore boys will participate in a fashion show event to be held in Dubai on October 18
துபாய் ஃபேஷன் ஷோ நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ள சிறுவர்கள் பயிற்சியாளருடன் உள்ளனர்.

துபாயில் நடைபெறும் சர்வதேச ஜூனியர் மாடல் ஃபேஷன் ஷோவில் கோவையை சேர்ந்த நான்கு மற்றும் ஆறு வயதே ஆன இரண்டு சிறுவர்கள் பங்கேற்கின்றனர்.
இதையடுத்து, இந்த ஆண்டிற்கான சர்வதேச அளவிலான ஃபேஷன் ஷோ நிகழ்ச்சி விரைவில் துபாயில் நடைபெற உள்ளது. இந்தப் ஃபேஷன் ஷோவில் கடந்த ஆண்டு வெற்றி பெற்ற ஏழு வயதான சிறுவன் ராணா பயிற்சி அளித்த 2 சிறுவர்கள் இந்தியா சார்பில் இந்த மாதம் பங்கேற்க உள்ளனர்.

இது குறித்து ரானாவின் தந்தை சிவக்குமார் கூறுகையில், “துபாயில் வரும் அக்.18ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடைபெற உள்ள சர்வதேச அளவிலான பேஷன் ஷோவில் இந்தியா சார்பில் 7 சிறுவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இதில் 2 பேர் கோவையை சேரந்தவர்கள். அவர்கள், ராணாவின் தந்தையான சிவகுமார் பயிற்சி அளித்த மோஹித் இஷான் வயது (4), திஷான் வயது (6) ஆகியோர் ஆவார்கள்.

அங்கு 4 சுற்றுகள் நடைபெற உள்ளது எனவும் 4 முதல் 6 வயது பிரிவில் பங்கேற்க உள்ளனர். இதில் வெற்றி பெறுபவர் இந்த ஆண்டிற்கான சர்வதேச ஜூனியர் மாடலாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இதனை கடந்த ஆண்டு பேஷன் ஷோவில் கலந்து கொண்டு வெற்றி பெற்று சாதனை படைத்த ராணாவின் தந்தை சிவக்குமார் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு துபாயில் நடைபெற்ற சர்வதேச ஜூனியர் ஃபேஷன் ஷோவின் இறுதிப் போட்டியில் பங்கேற்ற கோவையை சேர்ந்த 7 வயது சிறுவன் ராணா சிவக்குமார் வெற்றி பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார் என்பது நினைவு கூரத்தக்கது.

செய்தியாளர் பி.ரஹ்மான்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Coimbatore boys will participate in a fashion show event to be held in dubai on october 18