21 மணி நேரத்தில் 'ஸ்ரீமத் பாகவதம்' ஆல்பம்: கோவை சகோதரர்கள் நோபல் உலக சாதனை!

சகோதரர்கள் இருவரும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பல்வேறு அவதாரங்கள், லீலைகள் மற்றும் அவரது பக்தர்களைப் பற்றிய வரலாற்று நூலான ஸ்ரீமத் பாகவதம் நூலைத் தேர்ந்தெடுத்தனர்.

சகோதரர்கள் இருவரும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பல்வேறு அவதாரங்கள், லீலைகள் மற்றும் அவரது பக்தர்களைப் பற்றிய வரலாற்று நூலான ஸ்ரீமத் பாகவதம் நூலைத் தேர்ந்தெடுத்தனர்.

author-image
WebDesk
New Update
WhatsApp Image 2025-10-01 at 4.46.40 PM

Coimbatore

கோவை தெலுங்குபாளையத்தைச் சேர்ந்த இளம் சகோதரர்கள் இருவர் இணைந்து, வியாசர் அருளிய 'ஸ்ரீமத் பாகவதம்' நூலில் இடம்பெற்றுள்ள கதைப் பெயர்கள் மற்றும் கதாபாத்திரங்களை வெறும் 21 மணி நேரத்தில் ஒரே ஆல்பமாக உருவாக்கி, நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்று தமிழகத்திற்கே பெருமை சேர்த்துள்ளனர்.

Advertisment

கோவை தெலுங்குபாளையம் பகுதியைச் சேர்ந்த ரவிசங்கர் - சங்கீதா தம்பதியரின் மகன்களான பிரணவ் மற்றும் பிரித்திவ் ஆகியோர் சிறு வயது முதலே ஓவியம் மற்றும் கலைத் துறையில் பல்வேறு தனிச் சாதனைகளைப் புரிந்து கவனம் ஈர்த்து வந்தனர். இந்நிலையில், இருவரும் இணைந்து ஒரு புதிய உலக சாதனையை நிகழ்த்தத் திட்டமிட்டனர்.

பகவத் புராணத்தை மையப்படுத்திய சாதனை:

சகோதரர்கள் இருவரும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பல்வேறு அவதாரங்கள், லீலைகள் மற்றும் அவரது பக்தர்களைப் பற்றிய வரலாற்று நூலான ஸ்ரீமத் பாகவதம் நூலைத் தேர்ந்தெடுத்தனர். இந்த நூலில் இடம்பெற்றுள்ள பல்வேறு கதைப் பாத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு, ஒரு பிரம்மாண்டமான ஆல்பத்தை உருவாக்க அவர்கள் முடிவு செய்தனர்.

மூத்த மகன் பிரணவ், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், ராம, வராஹ, நரசிம்மர் போன்ற அவரது அவதாரங்கள், பக்தர்கள், முனிவர்கள் மற்றும் ராட்சசர்கள் ஆகியோரின் பாத்திரங்களின் ஓவியங்களைத் தத்ரூபமாக வரைந்தார்.

Advertisment
Advertisements

இளைய மகன் பிரித்திவ் அவர்கள், அந்தந்தப் பாத்திரங்களின் பெயர்களைத் துல்லியமாக எழுதி ஆவணப்படுத்தினார்.

WhatsApp Image 2025-10-01 at 4.46.36 PM

21 மணி நேர உழைப்பு:

இந்த இரு பெரும் பணிகளையும் சகோதரர்கள் இணைந்து, இடைவிடாது உழைத்து, வெறும் 21 மணி நேரத்திற்குள் ஒரே ஆல்பமாக வெற்றிகரமாக உருவாக்கி முடித்தனர். அவர்களின் இந்த ஒருங்கிணைந்த சாதனை, நோபல் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.

சகோதரர்கள் நிகழ்த்திய இந்தச் சாதனையை, நோபல் உலக சாதனைப் புத்தகத்தின் பதிப்பாளர் தியாகு நாகராஜ் அவர்கள் நேரடியாகக் கண்காணித்தார். சாதனையை உறுதிப்படுத்திய பின்னர், இளம் சகோதரர்கள் இருவருக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கி கௌரவித்தார்.

மேலும், சாதனை மாணவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் எனப் பலரும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரணவ் மற்றும் பிரித்திவ் இருவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்து உற்சாகப்படுத்தினர்.

பி.ரஹ்மான், கோவை மாவட்டம்.

Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: