கோவையில் தனியார் கல்லூரி கேட்டரிங் மாணவர்கள் 40 பேர் சேர்ந்து 30 நிமிடத்தில் 300 வகையான தேநீர் செய்து உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
உடலை சோர்வு இல்லாமல் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள தேநீர் என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையில் இன்று அவசியமாக ஒன்றாக உள்ளது. காலை, மதியம், மாலை என உணவு இடைவேளையின் போது 80 சதவீதம் பேர் தேநீர் அருந்துவதை கடைபிடித்து வருகின்றனர்.
இத்தகைய தேநீரின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் விதமாகவும்,உடலுக்கு ஊட்டச்சத்துக்களை கொடுக்கும் பல்வேறு வகையான தேநீர் உள்ளதை மக்களுக்கு கொண்டு செல்லும் விதமாகவும், கோவையை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர்கள் 300 வகையான தேநீர் செய்து அசத்தியுள்ளனர்.
/indian-express-tamil/media/post_attachments/a43066d4-7fa.jpg)
கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ராமகிருஷ்ணா கல்லூரியின் கேட்டரிங் துறையை சேர்ந்த 40 மாணவர்கள், கொய்யா, லெமன், வெண்ணிலா, ஆரஞ்சு, லோட்டஸ், ஆப்பிள், மேங்கோ, ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, ஆப்பிள் உள்ளிட்ட 300 வகையான தேநீரை 30 நிமிடங்களில் செய்து உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்.
/indian-express-tamil/media/post_attachments/3bb6269c-e22.jpg)
ஒரே நேரத்தில் பல வண்ணங்களில் பல்வேறு வகையான தேநீரை செய்து கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள இந்த நிகழ்வு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.
/indian-express-tamil/media/post_attachments/d9812dd9-a4c.jpg)
செய்தி: பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.