கோவையில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பொன்னியின் செல்வன் படத்தின் ’பொன்னி நதி’ பாடலுக்கு ஒரே இடத்தில் 408 மாணவிகள் நடனமாடியது பார்வையாளர்களை வியக்க வைத்தது.
Advertisment
கோவை பீளமேடு பகுதியில் உள்ள பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் வைர விழா மற்றும் கல்லூரியின் நிறுவன தினம் நடைபெற்றது. இதில் இனி வரும் காலங்களில் அழைக்கும் வகையில், கிருஷ்ணம்மாள் காலேஜ் ஃபார் வுமன் என புதிய லோகவை அறிமுகப்படுத்தினர்.
முன்னதாக மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
Advertisment
Advertisements
இதில் பொன்னியின் செல்வன் படத்தில் வரும் பொன்னி நதி பாடலுக்கு 408 கல்லூரி மாணவிகள் இணைந்து பெண் சக்தியை சித்தரிக்கும் வகையில் ஒரே இடத்தில் ஒரே மாதிரியான உடை அணிந்து நடனமாடி அசத்தினர்.