/indian-express-tamil/media/media_files/2025/05/10/UgMvFzfmFcEiedfZ5iRb.jpg)
கோவை கல்லூரி மாணவர்கள் பயங்கரவாதத்திற்கு எதிராக இந்திய ராணுவத்தினர் நடத்தி வரும் தாக்குதல் சம்பவத்தில் அவர்கள் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் இருக்க 2 நிமிடம் அமைதி பிராத்தனை செய்தனர். தொடர்ந்து ஆயுதப் படைகளுக்கான உதவித்தொகையை வழங்கப்பட்டது.
கோவை கருமத்தம்பட்டி அடுத்த கனியூர் பகுதியில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 25வது ஆண்டு விழா ஜீரோ-ஜி'25 என்ற பெயரில் நடைபெற்றது. இந்தக் கல்லூரி முதன்மை செயல் அலுவலர் அனுஷா ரவி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பிரபல நடிகை பிரியா வாரியார் மற்றும் இந்திய கப்பல் படையின் ஓய்வு பெற்ற கமாண்டர் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாணவ மாணவியரை உற்சாகப்படுத்தினர்.
இந்த விழாவில் ஓய்வு பெற்ற கமாண்டர் கூறியதாவது:-
ஒட்டு மொத்த இந்தியாவில் உள்ள மக்கள் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டும் என்பதற்காக எல்லையில் ராணுவ வீரர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து போராடி வருகிறார்கள். மீண்டும் தங்களது குடும்பத்தினரை பார்க்க வருவோமா மாட்டோமா என்பது கூட தெரியாமல் நாட்டிற்காக உழைத்து வருகிறார்கள். எனவே மாணவ மாணவிகள் ஒவ்வொருவரும் தங்களது நிலை அறிந்து நடந்து கொள்ள வேண்டும்.
தொடர்ந்து, பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்ற முனைப்புடன் பாகிஸ்தானுடன் போரிட்டு வரும் இந்திய ராணுவத்தினருக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படக்கூடாது. ஒரு உயிரிழப்பு கூட நிகழக் கூடாது என அனைவரும் இரண்டு நிமிடம் எழுந்து நின்று அமைதியாக பிரார்த்திக்க வேண்டும்." என்று அவர் கூறினார்.
இதையடுத்து, அந்த விழாவில் பங்கேற்ற அனைவரும் எழுந்து நின்று ராணுவ வீரர்களுக்காக பிரார்த்தனை செய்தனர். இந்த நிகழ்வில் ஆயுதப் படைகளுக்கான உதவித்தொகையை பார்க் குரூப் ஆப் இன்ஸ்டிடியூஷன் சி.இ.ஓ அனுஷா ரவி வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.