Advertisment

மருத்துவமனையில் உயிரிழந்த வளர்ப்பு நாய் - கதறி அழுத குடும்பத்தினர்: போலீசாரிடம் புகார்

கோவையில் விலங்குகள் நல மருத்துவமனையில் பராமரிப்புக்காக விடப்பட்ட நாய் உயிரிழந்ததால், நாயை வளர்த்த குடும்பத்தினர் கதறி அழுதனர். சம்பவம் குறித்து போலீசாரிடம் புகாரளிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Cbe dog issue

கோவை மாவட்டத்தில், விலங்குகள் நல மருத்துவமனையில் பரமாரிப்புக்காக விடப்பட்ட நாய் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

கோவை, கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் சரத். இவரது தங்கையின் திருமண ஏற்பாடுகள் அண்மையில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக அவரது குடும்பத்தினர் சென்றிருந்தனர். அப்போது, தாங்கள் 11 ஆண்டுகள் வளர்த்து வந்த சஞ்சு என்ற நாயை, மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள  விலங்குகள் நல மருத்துவமனையில் பராமரிப்பதற்காக கடந்த 21 ஆம் தேதி விட்டுச் சென்றனர். அதற்காக ரூ. 1200 கட்டணம் செலுத்தியுள்ளனர்.

இந்நிலையில், அன்று மாலை சரத்தை தொடர்பு கொண்ட மருத்துவமனை நிர்வாகத்தினர், நாய்க்கு உடல்நிலை சரியில்லை எனவும், உடனடியாக மருத்துவமனைக்கு வருமாறும் தெரிவித்துள்ளனர். அதன்பேரில், நேரில் வந்து பார்த்த போது நாய் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சரத் மற்றும் அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். மேலும், சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் முறையாக பதிலளிக்கவில்லை எனக் கூறி போலீசாரிடம் புகாரளிக்கப்பட்டுள்ளது.

தற்போது அக்குடும்பத்தினர் கதறி அழுத காட்சி இணையத்தில் பரவி வருகிறது.

 

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

 

Coimbatore Dog
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment